Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு!. ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

    அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரங்கள்!. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு வெண்டிலேட்டரில் உள்ளது!. உதயநிதி காட்டம்!

    எந்தவொரு அதிகாரமும் இல்லாத இந்த ‘சிறப்பு படை’யால் மக்களுக்கு என்ன பயன்? கனிமொழி எம்.பி.!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மீண்டும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்; தடுத்து நிறுத்துங்கள் – அரசுக்கு தங்கம் தென்னரசு கோரிக்கை
    Featured

    மீண்டும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்; தடுத்து நிறுத்துங்கள் – அரசுக்கு தங்கம் தென்னரசு கோரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksJune 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 thangam thennarasu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதியில் நான்கு ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் நிறுவனத்தின் முயற்சி கவலை அளிப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    திமுக ஆட்சியின்போது, தமிழ் நாட்டு வேளாண் பெருங்குடி மக்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலின் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த வகையிலான ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கும் அனுமதி இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டோம்.

    ONGC நிறுவனம் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பிற்கான ஆய்வு மேற்கொள்ள விண்ணப்பித்த போதுகூட அந்த முயற்சியினைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்திடும் வகையில் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ( State Environment Impact Assessment Authority- SEIAA) இத் திட்டத்திற்கான சுற்று சூழல் அனுமதியினை வழங்கக்கூடாதெனத் தக்கவகையில் அறிவுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

    அதேபோல், கடலூர் மாவட்டம் , பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதியில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கும் புதிதாகப் பதவியேற்றிருக்கும் அரசு தனது உறுதியான எதிர்ப்பைத் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள தங்கம் தென்னரசு.

    கடற்பகுதியில் இயற்கை வளங்களையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் இத்திட்டத்திற்கு மாநில சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் எத்தகு அனுமதியும் வழங்கக்கூடாது என தமிழ் நாடு அரசு உரிய வகையில் அறிவுறுத்தி தடுத்து நிறுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துவதாகக் கூறியுள்ளார்.

    Hydrocarbon Wells Tamil Nadu Politics thangam thennarasu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை..!! கரண்ட் கட்டால் கொந்தளித்த திமுகவினர்..!!
    Next Article தொடரும் பாலியல் வன்கொடுமைகள்; தமிழகத்தில் ஆட்சி உள்ளதா? – கனிமொழி கேள்வி  
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு!. ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

    June 15, 2026

    அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரங்கள்!. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு வெண்டிலேட்டரில் உள்ளது!. உதயநிதி காட்டம்!

    June 15, 2026

    எந்தவொரு அதிகாரமும் இல்லாத இந்த ‘சிறப்பு படை’யால் மக்களுக்கு என்ன பயன்? கனிமொழி எம்.பி.!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு!. ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

    அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரங்கள்!. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு வெண்டிலேட்டரில் உள்ளது!. உதயநிதி காட்டம்!

    எந்தவொரு அதிகாரமும் இல்லாத இந்த ‘சிறப்பு படை’யால் மக்களுக்கு என்ன பயன்? கனிமொழி எம்.பி.!

    அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்!. அந்த 14 முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை..!! அக்கவுண்ட்டில் வந்தாச்சு ரூ.1000..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.