Close Menu
    What's Hot

    MLA-க்களுக்கான புத்தாக்க பயிற்சி..!! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்..!!

    குலுங்கிய இந்தோனேசியா..!! நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு..!!

    தமிழ்நாட்டை உலுக்கிய கும்மிடிப்பூண்டி வழக்கு..!! பீகார் இளைஞனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»Featured»மூடப்பட்ட பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளை..!! ஒருவருக்கு கத்திக்குத்து..!! சிக்கிய தவெகவினர்..!!
    Featured

    மூடப்பட்ட பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளை..!! ஒருவருக்கு கத்திக்குத்து..!! சிக்கிய தவெகவினர்..!!

    editor5By editor5June 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 06 16 at 7.47.24 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் அருகே மூடப்பட்டிருந்த பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்ற நபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சமந்தாபாளையம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை எண் 2325 கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மூடப்பட்ட நிலையில், கடையின் உள்ளேயிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பிற பொருட்களைப் பாதுகாக்கும் பணியில் ஓர் பாதுகாவலர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த கோழிக்கடை உரிமையாளர் கார்த்தி உள்ளிட்ட நான்கு பேர் மது போதையில் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் பாரில் தண்ணீர் பாட்டில் கோரியபோது பாதுகாவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்ததாகக் கூறப்படுகிறது.

    உடனடியாக பாதுகாவலர், கடையை முன்பு நடத்தி வந்த மருதமுத்து என்பவருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் திருப்பூரில் இருந்து சமந்தாபாளையம் வந்த மருதமுத்து, போதையில் ரகளையில் ஈடுபட்டிருந்த நபர்களை அங்கிருந்து அகற்ற முயற்சி செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நான்கு பேரும் தங்களிடம் இருந்த கத்திகளைக் கொண்டு மருதமுத்துவை சரமாரியாகத் தாக்கினர். அவரது உடலில் நான்கு இடங்களில் ஆழமான கத்திக்குத்துக் காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த மருதமுத்துவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாவலர் உடனடியாக உதவிக்கு அழைப்பு விடுத்தார்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் மருதமுத்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஊதியூர் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். தலைமறைவாக இருந்த கார்த்தி, வலுகூறான், முத்துக்குமார், பிரகாஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்பகுதியில் மதுபானக் கடை மூடப்பட்ட பின்னரும் அவ்வப்போது நிகழும் ரகளைகள் மற்றும் போதை தொடர்பான சம்பவங்கள் உள்ளூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மருதமுத்துவின் உடல்நிலை குறித்து குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். போலீசார் முழு விவரங்களையும் திரட்டி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article61 நாட்களுக்குப் பிறகு.. கொத்து கொத்தாக கிடைத்த மீன்கள்..!! மகிழ்ச்சியில் மீனவர்கள்..!!
    Next Article புறப்பட்ட சில நிமிடங்களில்.. கீழே விழுந்து நொறுங்கிய B-52 ரக போர் விமானம்..!! 8 பேர் உயிரிழப்பு..!!
    editor5

    Related Posts

    MLA-க்களுக்கான புத்தாக்க பயிற்சி..!! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்..!!

    June 16, 2026

    குலுங்கிய இந்தோனேசியா..!! நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு..!!

    June 16, 2026

    தமிழ்நாட்டை உலுக்கிய கும்மிடிப்பூண்டி வழக்கு..!! பீகார் இளைஞனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!!

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    MLA-க்களுக்கான புத்தாக்க பயிற்சி..!! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்..!!

    குலுங்கிய இந்தோனேசியா..!! நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு..!!

    தமிழ்நாட்டை உலுக்கிய கும்மிடிப்பூண்டி வழக்கு..!! பீகார் இளைஞனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!!

    தவெக எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிராக வழக்கு..! ஊழல் செய்து வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு..!

    ஸ்லோவாக்கியாவில் பிரதமர் மோடி..!! மாணவர்களின் யோகா சாகசத்தை கண்டு நெகிழ்ச்சி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.