Close Menu
    What's Hot

    பயிர்க்கடன் தள்ளுபடி; முரணாகச் செயல்படுகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி;  எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்

    புதுச்சேரி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு – காங்கிரஸ் அறிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நாள்; ஆளுநர் அர்லேகர் நினைவூட்டல்
    Featured

    மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நாள்; ஆளுநர் அர்லேகர் நினைவூட்டல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 governor
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆங்கிலேயர்களின் இந்தியக் காலனியாதிக்கத்தை எதிர்த்து, 1801-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் நாள் மருது சகோதரர்களால் ஜம்புத் தீவு பிரகடனம் வெளியிடப்பட்டது.

    அதன் 225-வது ஆண்டான இன்று  பாரதம் சுயசார்புடன் என்றும் நிற்க எல்லோரும் ஜம்புத்தீவு பிரகடனத்தை நினைவிற் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வலியுறுத்தியுள்ளார்.

    ஆளுநர் அர்லேகர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;-

    முதல் சுதந்திரப் போருக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே, ஆற்காடு நவாப்களுக்கு அடியாள்களாக வந்து அதிகாரத்தைப் பறிக்க முயன்ற ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி விரட்ட ஆயுதப்போர் புரிந்து, மண்ணும் மானமும் பெரிதென்று மாபெரும்  போர் செய்த மாவீரர்கள் மருதுபாண்டியர்கள்!

    பாரதத்தின் கீழ் பகுதி நாவல் பழத்தை ஒத்திருப்பதால் வேதங்களிலும் புராணங்களிலும் ஜம்புத்தீவு என்றும்  சங்க இலக்கியங்களில் நாவலந்தீவு என்றும் அழைக்கப்பட்ட பாரத தேசத்தை காப்பதற்கும், மொழியாலும், தொழிலாலும், இனத்தாலும் பிரிவுகள் பல  இருந்தாலும் பாரதம் முழுவதும் ஒரே நாடு என்ற நோக்கில் மருதுபாண்டியர்கள் திருச்சியில் வெளியிட்ட “ஜம்புத்தீவு பிரகடனம்” என்பது க்ஷத்திரியனின் சங்க நாதம்! பாரத விடுதலை வரலாற்றில் ஒரு மைல்கல்! விடுதலை வேட்கையை உணர்ச்சிகளாய் கொட்டி உருவாக்கிய அறிக்கை கோழையினையும் கொதித்தெழச் செய்யும்!

    ஆங்கிலேயப் படையில் அடிமைச் சேவகம் செய்யும் நம்மவர்கள், அங்கிருந்து வெளியேறி வெள்ளையரைக் கண்ட மாத்திரத்தில் வெட்டி வீழ்த்த வேண்டுகோள் வைக்கிறார்கள், இதுவே பின்னாளில் ஆயுத போராட்டத்திற்கு அடிகோலிற்று!

    இதைச் செய்யாதவர்கள் என்ன பாவம் செய்தவர்கள் ஆகிறார்கள் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டு “ஐரோப்பிய இழி பிறவிகளை ஒருபோதும் மன்னிக்காத மருதுபாண்டியர்கள்” என்று பிரகடனத்தை நிறைவு செய்கிறார்கள்.

    பல்லாயிரம் வீரர் கொண்ட படையாலும் மருது சகோதரர்களை மண்டியிட வைக்க முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயே நயவஞ்சகர்கள், காளையார் கோவிலை பீரங்கியால் பிளப்போம் என அறிவிக்க, தர்மம் காக்க தலை கொடுத்தனர் மருது சகோதரர்கள்!

    ஜம்புத்தீவு பிரகடனம் தான் முதன்முதலில் பரங்கியருக்கு பாரதம்விட்ட பகிரங்க சவால்!

    பாரதம் சுயசார்புடன் என்றும் நிற்க எல்லோரும் நினைவிற் கொள்ள வேண்டியது ஜம்புத்தீவு பிரகடனம்!! “

    இவ்வாறு ஆளுநர் பதிவிட்டுள்ளார்.

    Governor Arlekar Jambudweep Proclamation Marudhu Brothers
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுபோதையில் சில்மிஷம்; பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி; கூலிங்கிளாஸ் ஆசாமியை வெளுத்தெடுத்த பெண்கள்
    Next Article இனி ஹெலிகாப்டரில் NEET வினாத்தாள்கள்… நெல்லையில் நடந்த சோதனை ஓட்டம்
    Editor TN Talks

    Related Posts

    பயிர்க்கடன் தள்ளுபடி; முரணாகச் செயல்படுகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    June 16, 2026

    அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி;  எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்

    June 16, 2026

    புதுச்சேரி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு – காங்கிரஸ் அறிவிப்பு

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பயிர்க்கடன் தள்ளுபடி; முரணாகச் செயல்படுகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி;  எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்

    புதுச்சேரி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு – காங்கிரஸ் அறிவிப்பு

    விஜயின் எம்.எல்.ஏ. வெற்றிக்கு சிக்கல்?  – நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

    உயர்கல்வித் துறையில் புதிய அறிவிப்புகளா? – அமைச்சர்  விஸ்வநாதன் சூசகத் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.