Close Menu
    What's Hot

    செய்திகளைப் படியுங்கள்; முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

    அதிமுக – தவெக டீலிங் என்னாச்சு? 8 அமைச்சர் பதவிகள் நிஜமா?. கேள்விகளை அடுக்கிய அப்பாவு!

    திருவண்ணாமலையில் அனிருத் சாமி தரிசனம்!. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»எங்களுக்கு இது வேண்டும்..! ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி விதித்த நிபந்தனை..!
    உலகம்

    எங்களுக்கு இது வேண்டும்..! ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி விதித்த நிபந்தனை..!

    Editor web4By Editor web4June 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2022-ம் ஆண்டு ரஷியா மற்றும் உக்ரைன் இடையே தொடங்கிய போரானது, இன்று வரையிலும் நீடித்து வருகிறது. கிட்டத்தட்ட 4 வருடங்களை தாண்டியும் இருநாட்டுக்கும் இடையேயான தாக்குதல்கள் நீண்டுக் கொண்டே செல்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கின.

    ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது. போரால் வீரர்கள் உள்பட இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடியும் விட்டனர்.

    போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன், டிரம்ப் பேசினார். எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை.

    இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போரானது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், ரஷியாவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு ஜெலன்ஸ்கி நிபந்தனை விதித்துள்ளார். ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுடன் எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்தவொரு நேரடி அமைதி பேச்சுவார்த்தையும் ரஷியா அல்லது உக்ரைனில் நடைபெறாமல், ஒரு நடுநிலையான மூன்றாவது நாட்டில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இதன்படி, ரஷியாவுடனான நேரடி பேச்சுவார்த்தைக்கு சாத்தியமான இடங்களாக சுவிட்சர்லாந்து, துருக்கி, மத்திய கிழக்கு நாடுகள் அல்லது அமெரிக்கா ஆகியவற்றை ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். இத்தகைய உயர்நிலை அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு நடுநிலையான இடமே மிக சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    பிரான்ஸ் நாட்டில் இவியான் நகரில் ஜி7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அந்நாட்டுக்கு சென்றுள்ளார். எனினும், அவருடைய இந்த கோரிக்கையை ரஷியா நிராகரிக்க கூடிய சூழல் உள்ளது. ஏனெனில், அமைதி பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோ நகருக்கு ஜெலன்ஸ்கி வர வேண்டும் என்று ரஷியா கூறி வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅடுத்த 3 நாட்கள் தமிழ்நாட்டில் பரவலான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
    Next Article ராஜஸ்தான் கோட்டாவில் இன்று மாணவர் பேரணி; ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார்
    Editor web4

    Related Posts

    செய்திகளைப் படியுங்கள்; முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

    June 17, 2026

    அதிமுக – தவெக டீலிங் என்னாச்சு? 8 அமைச்சர் பதவிகள் நிஜமா?. கேள்விகளை அடுக்கிய அப்பாவு!

    June 17, 2026

    திருவண்ணாமலையில் அனிருத் சாமி தரிசனம்!. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்!

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செய்திகளைப் படியுங்கள்; முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

    அதிமுக – தவெக டீலிங் என்னாச்சு? 8 அமைச்சர் பதவிகள் நிஜமா?. கேள்விகளை அடுக்கிய அப்பாவு!

    திருவண்ணாமலையில் அனிருத் சாமி தரிசனம்!. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்!

    கோட், பட்டு வேட்டி அணிவது செய்திகளா? என் அன்பான வேண்டுகோள் இதுவே..! முதல்வருக்கு ஸ்டாலின் அட்வைஸ்..!

    கவுதமியின் சொத்து மோசடியாக விற்பனை; கைதானவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.