Close Menu
    What's Hot

    பேருந்து கட்டணம் உயருமா? போக்குவரத்துத் துறை விளக்கம்

    மின்கட்டண உயர்வு திட்டத்தை கைவிடுக – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    பக்தர்களை வற்புறுத்தக் கூடாது: பூஜைப் பொருட்கள் விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ஃபிஃபா அப்டேட் : மெஸ்ஸின் ஹாட்ரிக் கோல் மழை..! அல்ஜீரியாவுக்கு ஆப்பு வைத்த அர்ஜென்டினா..!
    விளையாட்டு

    ஃபிஃபா அப்டேட் : மெஸ்ஸின் ஹாட்ரிக் கோல் மழை..! அல்ஜீரியாவுக்கு ஆப்பு வைத்த அர்ஜென்டினா..!

    Editor web4By Editor web4June 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கான்சாஸ் சிட்டியில் இந்திய நேரப்படி 6.30 மணிக்கு ’ஜெ’ பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவும், அல்ஜீரியாவும் மோதின. உலகக் கோப்பையில் 6வது முறையாக களமிறங்கி இருகும் மெஸ்ஸியின் ஆட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர்.

    ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்திலேயே தனது கணக்கை தொடங்கினார் மெஸ்ஸி. ஆனால் அது ஆஃப் சைட் காரணமாக செல்லாத கோலாக மாறியது. அதேப் போல், 9வது நிமிடத்தில் அல்ஜீரியா வீரர் அடித்த கோலும் ஆப் சைட் கோலாக மாறியது. தொடர்ந்து 17-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

    சமநிலையை எட்ட, அல்ஜீரியா கடுமையாக போராடிய போதிலும், முதல் பாதி முடிவில் அந்த அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய அர்ஜென்டினா அணிக்காக, 60-வது நிமிடத்தில் மெஸ்சி தனது இரண்டாவது கோலை பதிவு செய்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார்.

    அதன் பின்னரும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த மெஸ்சி, 76-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்ததுடன், அர்ஜென்டினாவின் வெற்றியையும் உறுதி செய்தார். இறுதி நேரம் வரை கோல் அடிக்க அல்ஜீரியா போராடிய போதிலும், அர்ஜென்டினாவின் தடுப்பாட்டத்தை உடைக்க முடியவில்லை.

    இதனால், 3-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்திய அர்ஜென்டினா அணி, உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது. இந்த போட்டியில் மூன்று கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்த லியோனல் மெஸ்சி, உலகக் கோப்பை மேடையில் மீண்டும் தனது மாயாஜாலத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராஜஸ்தான் கோட்டாவில் இன்று மாணவர் பேரணி; ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார்
    Next Article மகளிர் டி20 ; அயர்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து
    Editor web4

    Related Posts

    பேருந்து கட்டணம் உயருமா? போக்குவரத்துத் துறை விளக்கம்

    June 17, 2026

    பக்தர்களை வற்புறுத்தக் கூடாது: பூஜைப் பொருட்கள் விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள்!

    June 17, 2026

    செய்திகளைப் படியுங்கள்; முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பேருந்து கட்டணம் உயருமா? போக்குவரத்துத் துறை விளக்கம்

    மின்கட்டண உயர்வு திட்டத்தை கைவிடுக – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    பக்தர்களை வற்புறுத்தக் கூடாது: பூஜைப் பொருட்கள் விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள்!

    செய்திகளைப் படியுங்கள்; முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

    அதிமுக – தவெக டீலிங் என்னாச்சு? 8 அமைச்சர் பதவிகள் நிஜமா?. கேள்விகளை அடுக்கிய அப்பாவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.