Close Menu
    What's Hot

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    சென்னையில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»லாக் அப் டெத்?. 101 நாட்களுக்கு பின் ஆகாஷ் டெலிசன் உடல் தகனம்!. கதறிய பெற்றோர்கள்!
    Featured

    லாக் அப் டெத்?. 101 நாட்களுக்கு பின் ஆகாஷ் டெலிசன் உடல் தகனம்!. கதறிய பெற்றோர்கள்!

    Editor web3By Editor web3June 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Akash Delison body
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவகங்கையைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் டெலிசனின் உடல்,  101 நாட்கள் கழித்து இன்று மதுரை தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    கடந்த மார்ச் மாதம் இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், ஆகாஷ் டெலிசன், விசாரணையின் போது பலத்த காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 8-ம் தேதி உயிரிழந்தார். இறப்பதற்கு முன், காவல்துறை தன்னைத் தாக்கியதாக அவர் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடலில் 28 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.

    இந்த விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், 16 காவல்துறையினரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆகாஷின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை நேரடியாகக் கண்காணித்து வந்தது.

    இறந்து மூன்று மாதங்களாகியும் உடலைப் பெற்றுக்கொள்ளாத சூழலில், நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, ஆகாஷின் உடலைப் பெற்று கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இன்று காலை காவல்துறையினர் உடலை எடுத்துச் செல்ல முற்பட்டபோது, குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, அவர்கள் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர், குடும்பத்தினர் முன்னிலையில் ஆகாஷின் உடல் தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    மகனின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்தபோது, அவரது தாய் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை நிலைகுலையச் செய்தது. “என் மகனைக் கொன்றவர்களைக் கைது செய்யவில்லை. என் மகனின் சாவுக்குக் காரணமானவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்” எனக் கண்ணீருடன் மண்ணை வாரித் தூற்றி அவர் சாபமிட்டது, அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    after 101 days Akash Delison body cremated Custodial death Sivaganga
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதல்வருக்கு ‘செவித்திறன் கருவி’ அனுப்பிய சமூக ஆர்வலர்!. கோவையில் நூதனப் போராட்டம்!
    Next Article முதலமைச்சரை சந்தித்தார் வைகோ – திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக ஆயத்தம்?
    Editor web3
    • Website

    Related Posts

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    July 26, 2026

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    July 26, 2026

    சென்னையில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    சென்னையில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    மத்திய கிழக்குப் போரில் ஈரானுக்கு ரஷ்யா உதவி!: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

    டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தித் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.