Close Menu
    What's Hot

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ
    Featured

    விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ

    Editor web2By Editor web2June 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vaiko Vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கூட்டணி அரசியல், ஸ்டெர்லைட் விவகாரம், தனது புதிய நூல் வெளியீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 2.45 மணி அளவில் முதலமைச்சர் விஜயை சந்தித்தார் வைகோ. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தவெக உடன் கூட்டணிக்கு வருமாறு வைகோவுக்கு விஜய் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  விஜய்யுடன் பேசியது என்ன என்பது குறித்து விளக்கினார்.

    தூத்துக்குடியில் “கிரீன் காப்பர்” என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்ற தகவல்கள் வருவதாகக் கூறிய அவர், எந்த சூழலிலும் அந்த ஆலைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

    மேலும், நாடாளுமன்றத்தில் தாம் ஆற்றிய உரைகளை ஆறு தொகுதிகளாக நூலாக்கியிருப்பதாகவும், அந்த நூல் ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லியில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறினார். நூலின் முதல் பிரதியை முதலமைச்சர் விஜய் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

    முதலமைச்சர் தன்னுடன் சுமார் 45 நிமிடங்கள் நேரம் ஒதுக்கி பேசியதற்கு நன்றி தெரிவித்த வைகோ, இந்த சந்திப்பு தனக்கு மிகுந்த மனநிறைவை அளித்ததாக கூறினார். அரசியல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டணி தொடர்பான முடிவு, வருகிற 27 ஆம் தேதி நடைபெற உள்ள மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஆலோசித்த பின்னரே எடுக்கப்படும் என்று விளக்கமளித்தார்.

    அதேபோல், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து தற்போது கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கூறினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தவர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தான் எனக் குற்றம்சாட்டிய அவர்,  உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில்தான் அதனை அதிமுக அரசு மூடியதாகவும், ஆனால் இறுதி வரை அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக இருந்ததாகவும் வைகோ குற்றம்சாட்டினார்.

    SterliteIssue TamilNaduPolitics TVKAlliance Vaiko
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகில் – இஷான் அதிரடி! ரன் மழை பொழிந்த இந்தியா!. ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இமாலய இலக்கு!
    Next Article ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!
    Editor web2
    • Website

    Related Posts

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    June 17, 2026

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    June 17, 2026

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ

    கில் – இஷான் அதிரடி! ரன் மழை பொழிந்த இந்தியா!. ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இமாலய இலக்கு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.