Close Menu
    What's Hot

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!
    Featured

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    Editor web3By Editor web3June 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    DGP Sandeep Mittal transfer
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, முக்கிய அரசுத் துறைகளில் அதிகாரிகள் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, காவல்துறை உயர் மட்டத்திலும் அதிரடி இடமாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

    அந்தவகையில், தமிழ்நாடு ஆயுதப்படை டிஜிபியாக இருந்த சந்தீப் மிட்டல், தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இப்பதவியில் இருந்த ஓய்வு பெற்ற அதிகாரி சுனில் குமார், ஆட்சி மாற்றத்திற்குப் பின் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அந்த வெற்றிடத்திற்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல், தமிழ்நாடு காவலர் அகாடமியின் இயக்குநராகப் பணியாற்றிய தினகரன், தமிழ்நாடு ஆயுதப்படை ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படைத் தலைமைப் பொறுப்பு தற்போது டிஜிபி அந்தஸ்திலிருந்து ஏடிஜிபி அந்தஸ்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், அவர் அந்தப் பொறுப்பை ஏற்கிறார்.

    தமிழ்நாடு தீ மற்றும் மீட்புப் பணிகள் டிஜிபியாக இருக்கும் சீமா அகர்வால், கூடுதலாக ‘தீயணைப்பு ஆணையத் தலைவர்’ பொறுப்பையும் கவனிக்க உள்ளார். முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால், தீயணைப்பு ஆணையத் தலைவர் பதவியை வகித்து வந்தார். சமீபத்திய ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அவர் அப்பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்த கூடுதல் பொறுப்பு தற்போது சீமா அகர்வாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் மணிவாசன் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளார். காவல்துறை நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    DGP Sandeep Mittal Tamil Nadu government Three senior IPS officers transfer
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெகவில் இணைவா..?? ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க..!! பங்கம் செய்த செல்லூர் ராஜு..!!
    Next Article உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    ஓட்டல்களுக்கு இட்லி விற்பனை..!! எழுந்த பரபரப்பு புகார்..!! அம்மா உணவக ஊழியர்கள் 2 பேர் டிஸ்மிஸ்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.