2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் ஜெர்மனி மற்றும் ஐவரி கோஸ்ட் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் முதல் பாதியில் 30-வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் அணியின் கேப்டன் பிராங்க் கெஸ்ஸி (Franck Kessié) ஒரு சூப்பரான கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். இரண்டாவது பாதியில் ஜெர்மனி அணியின் மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்த டெனிஸ் உந்தாவ் (Deniz Undav) ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அவர் 68-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
ஆட்டம் சமனில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் நேரத்தில் 94-வது நிமிடத்தில் டெனிஸ் உந்தாவ் மீண்டும் ஒரு அபாரமான கோலை அடித்து ஜெர்மனிக்கு 2-1 என்ற கணக்கில் திரில் வெற்றியைத் தேடித்தந்தார். இந்த மாபெரும் வெற்றியின் மூலம் ஜெர்மனி அணி 6 புள்ளிகளுடன் ‘E’ பிரிவில் முதலிடம் பிடித்து, அடுத்த சுற்றான ‘ரவுண்ட் ஆஃப் 32 நாக்-அவுட் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது.
