Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய் உடன் அமெரிக்க தூதர் சந்திப்பு!

    ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம்!

    சிங்கப் பெண் அதிரடிப்படை உதவி எண் “1091”!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மேகதாதுவில் நடுவர் மன்றம் கோரியது ஏன்? – தங்கம் தென்னரசு விளக்கம்
    Featured

    மேகதாதுவில் நடுவர் மன்றம் கோரியது ஏன்? – தங்கம் தென்னரசு விளக்கம்

    Editor web2By Editor web2June 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thangam thennarasu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேகதாது விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையால் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எந்த வகையிலும் பாதிக்காது என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

    சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த  தங்கம் தென்னரசு, ”மேகதாது விவகாரம் குறித்து அதிமுகவினர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேகதாது விவகாரத்தில் திமுக சில திருத்தங்களை கூறியது. அதன்பின் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்டா மக்களுக்காக இந்த திருத்தம் மிகவும் அவசியமானது” என்றார்.

    மேகதாதுவில் அணை கட்ட கூடாது எனப் பல முறை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும், அனைத்து கட்சி கூட்டங்களிலும் நமது எதிர்ப்பை நாம் தெரிவித்து உள்ளதாகவும் கூறிய அவர், ஆனால் பிடிவாதமாக அணையை கட்டுவோம் என கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனை கவனமாக கையாள வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் பெரிய நடவடிக்கை எடுத்துவிடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

    அதேபோல் மேகதாது விவகாரம் என்பது உச்சநீதிமன்றதில் கூட முடிவுக்கு கொண்டு வர முடியாத ஒரு பிரச்சனையாக உள்ளது என்ற அவர், மூத்த வல்லுநர்கள் ஆலோசனையின் பேரிலேயே புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம் என்றும், இந்த கோரிக்கையால் உச்சநீதிமன்றம் காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எந்த வகையிலும் பாதிக்காது என்று தெரிவித்தார்.

    அதுமட்டுமன்றி, நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது நல்ல முடிவு தான். கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, திமுக தெரிவித்த கருத்தை முதல்வர் ஏற்று, முன்மொழிந்து தீர்மானம் நிறைவேறி உள்ளது.பெண்ணையாறு குறுக்கே அணை கட்ட கூடாது என்று கோரிக்கை வைத்த போது, உச்சநீதிமன்றம் நடுவர் மன்றம் அமைக்கலாம் என்று கூறி உள்ளது.  இந்நிலையில் டெல்டா மக்கள் நலனை பாதுகாக்க வேண்டும் என்கிற வகையில் நடுவர் மன்றம் கேட்பது ஒரு முயற்சியே.மக்களை பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் நாம் அனுமதிக்க கூடாது.பேரவையில் மேகதாது தீர்மானம் திருத்தம் கொண்டுவரும் போது, யாரும் கருத்து கூறவில்லை.அனைத்து கட்சிகளும் ஓர் அணியாக இருந்து டெல்டா மக்களை பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுகொண்டார்.

    CauveryIssue Mekedatu tamilnadu ThangamThennarasu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிருதுநகரில் பயங்கரம்! லாரியோடு மோதி நொறுங்கிய கார்!. உயிருக்கு போராடிய 4 பேர் மீட்பு!
    Next Article திருவள்ளூர் : விஷவாயு தாக்கி 8 பேர் உயிரிழப்பு சம்பவம்..! தலா ரூ.10லட்சம் இழப்பீடு தொகை..! திருமா வேண்டுகோள்..!
    Editor web2
    • Website

    Related Posts

    முதல்வர் விஜய் உடன் அமெரிக்க தூதர் சந்திப்பு!

    June 22, 2026

    ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம்!

    June 22, 2026

    சிங்கப் பெண் அதிரடிப்படை உதவி எண் “1091”!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய் உடன் அமெரிக்க தூதர் சந்திப்பு!

    ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம்!

    சிங்கப் பெண் அதிரடிப்படை உதவி எண் “1091”!

    விஜய்யின் அரசியல் பயணமும் தந்தை எஸ்ஏசி-யின்  17 ஆண்டு கனவும்!

    மாண்புமிகு மாணவன் to மாண்புமிகு முதல்வர்! விஜய்யின் திரையும், களமும்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.