Close Menu
    What's Hot

    சி.எம். விஜய் சொல்வது உண்மையா?  சிபிஎம் செயலாளர் பதில்!

    ”அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!” – விஜய்யின் பிறந்த நாள் பரிசு?

    நலத்திட்ட உதவிக்கு லஞ்சம்!. சமூக நலத்துறை பெண் அதிகாரிகள் 3 பேர் கைது!. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பணிப்பெண்கள் சிறைபிடிப்பா?. சிக்கிய நடிகர் ரவி மோகன்!. நீலாங்கரையில் பரபரப்பு!
    Featured

    பணிப்பெண்கள் சிறைபிடிப்பா?. சிக்கிய நடிகர் ரவி மோகன்!. நீலாங்கரையில் பரபரப்பு!

    Editor web3By Editor web3June 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ravi mohan 2 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் பிரபல நடிகர் ரவி மோகன் வீட்டில் பணிபுரிந்த பெண்களை, அவரது மகனுடன் சேர்த்து சட்டவிரோதமாகச் சிறைபிடித்து வைத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, போலீஸார் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகர் ரவி மோகனின் இல்லம் சென்னை நீலாங்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வேலைக்காகச் சென்ற இரண்டு பணிப்பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த தகவலைத் தொடர்ந்து, நீலாங்கரை காவல் நிலைய போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டில் பணிப்பெண்கள் மற்றும் சிறுவன் ஒருவன் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த சில பொருட்களை அவர்கள் திருடிவிட்டதாக நடிகர் ரவி மோகன் தரப்பில் சந்தேகம் கிளப்பப்பட்டது. அதன் காரணமாகவே, அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக வீட்டில் தங்க வைத்திருந்ததாகக் கூறப்பட்டது.

    இருப்பினும், சட்டம் ஒழுங்கைத் தன் கையில் எடுத்துக்கொண்டு இதுபோன்று யாரையும் தனிப்பட்ட முறையில் சிறைபிடித்து விசாரிக்கக் கூடாது என்று ரவி மோகன் தரப்பினருக்கு போலீஸார் கண்டிப்புடன் தெரிவித்தனர்.

    மேலும், ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்குமாறும், சட்டப்படி அதனை போலீஸார் விசாரிப்பார்கள் என்றும் அறிவுறுத்தினர். இதையடுத்து அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் மீட்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து நீலாங்கரை போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    actor ravi mohan cornered Holding captive Maids Neelankarai
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெங்களூருவில் கொடூரம்!. மூத்த மகளின் ‘லிவ்-இன்’ காதலனால் பெற்றோர், தங்கை வெட்டிப் படுகொலை!
    Next Article வடசென்னை 2-ல் தனுஷ்? வெற்றிமாறனின் திட்டம் என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    சி.எம். விஜய் சொல்வது உண்மையா?  சிபிஎம் செயலாளர் பதில்!

    June 23, 2026

    ”அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!” – விஜய்யின் பிறந்த நாள் பரிசு?

    June 23, 2026

    நலத்திட்ட உதவிக்கு லஞ்சம்!. சமூக நலத்துறை பெண் அதிகாரிகள் 3 பேர் கைது!. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சி.எம். விஜய் சொல்வது உண்மையா?  சிபிஎம் செயலாளர் பதில்!

    ”அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!” – விஜய்யின் பிறந்த நாள் பரிசு?

    நலத்திட்ட உதவிக்கு லஞ்சம்!. சமூக நலத்துறை பெண் அதிகாரிகள் 3 பேர் கைது!. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

    ரூ.12 கோடி சம்பள குறைப்பு!. மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பினார் ரிஷப் பண்ட்!

    ”மேகதாது: தொலைநோக்குச் சிந்தனை இல்லாத கோரிக்கை” – சீமான் காட்டம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.