Close Menu
    What's Hot

    TNPSC: குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு! வயது வரம்பு விவரம்

    ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி

    “ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல உதயநிதி பேசக்கூடாது?”  – தவெக விளாசல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»25 ஆண்டுகால திரைப்பயணம்!. பத்மஸ்ரீ விருதை பெற்றார் நடிகர் மாதவன்!
    சினிமா

    25 ஆண்டுகால திரைப்பயணம்!. பத்மஸ்ரீ விருதை பெற்றார் நடிகர் மாதவன்!

    Editor web3By Editor web3June 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    actor Madhavan Padma Shri
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய அசாத்திய பங்களிப்பிற்காக, பிரபல முன்னணி நடிகர் ஆர். மாதவனுக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஜூன் 23) வழங்கி கௌரவித்தார்.

    டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விருது வழங்கும் மேடையில் பிரதமர் மோடிக்கு மாதவன் தனது மரியாதையான வணக்கத்தைத் தெரிவித்தார். 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த குடியரசு தின விழாவின் போது வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    தமிழ், இந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் மாதவன். குறிப்பாக ‘அலைபாயுதே’, ‘மின்னலே’, ‘விக்ரம் வேதா’ மற்றும் அவர் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்த அவரது கலைச் சேவையைப் பாராட்டி இந்த ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது இந்தச் சாதனைக்குத் திரை உலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    actor Madhavan Padma Shri award pm modi President Droupadi Murmu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article7 ஆண்டுகளில் 6 பிரதமர்!. ஏன் எந்த இங்கிலாந்து பிரதமரும் நீண்ட காலம் பதவியில் நீடிப்பதில்லை?
    Next Article விஜய் அமிர்தராஜ், மம்மூட்டி, மாதவன் உள்பட 65 பேருக்கு பத்ம விருதுகள்; குடியரசுத் தலைவர் வழங்கினார்
    Editor web3
    • Website

    Related Posts

    TNPSC: குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு! வயது வரம்பு விவரம்

    June 23, 2026

    ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி

    June 23, 2026

    “ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல உதயநிதி பேசக்கூடாது?”  – தவெக விளாசல்

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    TNPSC: குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு! வயது வரம்பு விவரம்

    ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி

    “ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல உதயநிதி பேசக்கூடாது?”  – தவெக விளாசல்

    அறிமுகமான இதே நாளில் ‘பத்மஸ்ரீ’ விருது!. இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஹிட்மேன் ரோஹித் சர்மா!

    விஜய் அமிர்தராஜ், மம்மூட்டி, மாதவன் உள்பட 65 பேருக்கு பத்ம விருதுகள்; குடியரசுத் தலைவர் வழங்கினார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.