Close Menu
    What's Hot

    அடுத்தடுத்தடுத்து வெளியாகும் அதிரடி; விஜய் ஆட்சியில் காவல்துறையினர் 170 பேர் இடமாற்றம்  

    என்னது..!! அரசுப் பள்ளியில் மாணவர்கள் சினிமா பாட்டு பாடுனாங்களா..!! TN Factcheck சொன்னது என்ன..??

    அமைச்சர் ராஜ்மோகன், ஆட்சியர் வருகையில் தாமதம்!. சாலையில் 3 மணிநேரம் காத்திருந்த மாணவர்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அமோனியா கசிவால் உயிரிழந்த 10 பெண்கள்; நடவடிக்கை குறித்து நல்வாழ்வுத்துறை அறிக்கை
    Featured

    அமோனியா கசிவால் உயிரிழந்த 10 பெண்கள்; நடவடிக்கை குறித்து நல்வாழ்வுத்துறை அறிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksJune 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 amoniay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமோனியா வாயுக் கசிவு நிகழ்வில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதில் 5 பேரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள கன்னிகைப் பேர், மஞ்சங்காரனை பகுதியில் செயல்பட்டு வரும் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஜூன் 21ஆம் தேதி அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதாக தகவல் பெறப்பட்டது. வழக்கமான தொழிற்சாலை பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் வாயுவால் பாதிக்கப்பட்டனர்.

    சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனே அவசர மருத்துவக் குழுக்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், பொதுசுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் விரைந்து செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அமோனியா வாயுவை சுவாசித்ததன் காரணமாக ஏற்படும் அறிகுறிகளான மூச்சுத்திணறல், கண் மற்றும் சுவாசப் பாதை எரிச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த அமோனியா வாயுக் கசிவு சம்பவத்தால் மொத்தம் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 68 பேர் தற்போது சிகிச்சை பெற்று மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 65 பேர் பெண்கள் மற்றும் 3 பேர் ஆண்கள் ஆவர். இவர்களில் 17 நோயாளிகள் வென்டிலேட்டர் (Ventilator) உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    21 நோயாளிகளுக்கு மூக்குக் குழாய் (Nasal Oxygen) மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

    30 நோயாளிகளின் உடல்நிலை தற்போது நிலையாக உள்ளது.

    5 பேர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இந்த நிகழ்வில் 21.06.2026 இரவு 8.00 மணி நிலவரப்படி 2 பேர் உயிரிழந்துள்ளனர். 22.06.2026 மாலை 7.00 மணிக்கு மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 23.06.2026 காலை 7.00 மணி நிலவரப்படி 1 உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இன்று காலை 10.00 மணி நிலவரப்படி மேலும் 1 உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

    இதன் மூலம், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.  இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 8 பெண்கள் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களில் 5 பேரின் உடல்கள் 23.06.2026 அன்று விமானம் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

    மீதமுள்ள 5 பேரின் உடல்களும் அனைத்து சட்டரீதியான நடைமுறைகள் நிறைவடைந்தவுடன் உரிய நேரத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் உரிய மருத்துவ சிகிச்சை தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதுடன், நிலைமையை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும்,

    சரியான நேரத்தில் சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவ நிறுவனங்களுடன் தொடர்ந்து ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ammonia gas leak Health Department tiruvallur Tiruvallur News
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் ஒன்றிணைந்த குடும்பம்..!! தந்தை ராமதாஸை சந்தித்தார் மகன் அன்புமணி..!!
    Next Article தமிழ்நாட்டில் தாக்கம் செலுத்துமா “ஆபரேஷன் டூஃபான்”? விஜய்க்கு கேரள முதல்வர் முக்கிய கடிதம்..!!
    Editor TN Talks

    Related Posts

    அடுத்தடுத்தடுத்து வெளியாகும் அதிரடி; விஜய் ஆட்சியில் காவல்துறையினர் 170 பேர் இடமாற்றம்  

    June 24, 2026

    என்னது..!! அரசுப் பள்ளியில் மாணவர்கள் சினிமா பாட்டு பாடுனாங்களா..!! TN Factcheck சொன்னது என்ன..??

    June 24, 2026

    அமைச்சர் ராஜ்மோகன், ஆட்சியர் வருகையில் தாமதம்!. சாலையில் 3 மணிநேரம் காத்திருந்த மாணவர்கள்!

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடுத்தடுத்தடுத்து வெளியாகும் அதிரடி; விஜய் ஆட்சியில் காவல்துறையினர் 170 பேர் இடமாற்றம்  

    என்னது..!! அரசுப் பள்ளியில் மாணவர்கள் சினிமா பாட்டு பாடுனாங்களா..!! TN Factcheck சொன்னது என்ன..??

    அமைச்சர் ராஜ்மோகன், ஆட்சியர் வருகையில் தாமதம்!. சாலையில் 3 மணிநேரம் காத்திருந்த மாணவர்கள்!

    பாஜக+திமுக+அதிமுக = கொள்கை புடலங்காய்..!! சிபிஎம் விமர்சனம்..!!

    மேயர் பிரியாவை நோக்கி வந்த அதிமுக கவுன்சிலர்..!! சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.