Close Menu
    What's Hot

    ”இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக முயற்சி” – காரணத்தைச் சொல்லும் காங்கிரஸ்

    அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி

    “ பார்த்து பார்த்து படிச்சாரே…” – உதயநிதியை கலாய்த்த துணை சபாநாயகர்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»”இனி இஷ்டத்துக்கு FOOD REVIEW  பண்ண முடியாது!” –  யூடியூபர்களுக்கு அரசு எச்சரிக்கை
    தமிழ்நாடு

    ”இனி இஷ்டத்துக்கு FOOD REVIEW  பண்ண முடியாது!” –  யூடியூபர்களுக்கு அரசு எச்சரிக்கை

    Editor web2By Editor web2June 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Street foods
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சமூக வலைத்தளங்களில், குறிப்பாக யூடியூபில் உணவகங்கள் குறித்து ‘ஃபுட் ரிவ்யூ’ (Food Review) செய்யும்  கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அதிரடி அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் பல யூடியூபர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு (Paid Promotions), உணவின் தரம் மற்றும் கடையின் சுகாதாரம் குறித்து ஆராயாமல், வெறும் விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே ரிவ்யூக்களை வெளியிடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

    இதனை முறைப்படுத்த நுகர்வோரின் ஆரோக்கியத்தை முன்னிறுத்திச் சில முக்கிய விதிகளைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

    உணவு பாதுகாப்புத் துறையின் புதிய முக்கிய விதிகள்:

    • FSSAI கட்டாயம்: யூடியூபர்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) முறையான உரிமம் அல்லது பதிவு பெற்ற உணவகங்களில் மட்டுமே இனி ஃபுட் ரிவ்யூ செய்ய வேண்டும்.
    • அலங்காரத்திற்கு தடா: கடையின் வெளித்தோற்றத்தையும், உள் அலங்காரத்தையும் (Interior & Exterior) மட்டுமே கவர்ச்சியாகக் காட்டி இனி வீடியோக்களை வெளியிடக் கூடாது.
    • சமையலறை சுகாதாரம்: உணவகங்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம், சமையலறை மற்றும் உணவுகள் தயாரிக்கும் இடம் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதை நேரடியாகக் கண்காணித்துக் காட்சிப்படுத்த வேண்டும்.
    • ஊழியர்கள் கட்டுப்பாடு: கடையில் பணியாற்றுபவர்கள் மற்றும் உணவு தயாரிப்பவர்கள் முறையாகக் கையுறை (Gloves) மற்றும் தலையுறை (Headgears) அணிந்துள்ளனரா என்பதையும், அங்கு வழங்கப்படும் குடிநீர் தரமாக உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

    Food

    இனிவரும் நாட்களில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி உணவகங்கள் செயல்படுவதை உணர்ந்து மட்டுமே ஃபுட் ரிவ்யூ செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் உணவகங்கள் மற்றும் தவறான விளம்பரப் பதிவுகளைப் பரப்பும் சமூக வலைத்தளப் பக்கங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

    FoodReviewGuidelines FoodSafetyTN FSSAI TamilNaduNews
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசட்டப்பேரவையில் முதலமைச்சர் நடிக்க வேண்டிய அவசியம் எப்போதும் இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்
    Next Article “ பார்த்து பார்த்து படிச்சாரே…” – உதயநிதியை கலாய்த்த துணை சபாநாயகர்
    Editor web2
    • Website

    Related Posts

    ”இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக முயற்சி” – காரணத்தைச் சொல்லும் காங்கிரஸ்

    June 24, 2026

    அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி

    June 24, 2026

    “ பார்த்து பார்த்து படிச்சாரே…” – உதயநிதியை கலாய்த்த துணை சபாநாயகர்

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக முயற்சி” – காரணத்தைச் சொல்லும் காங்கிரஸ்

    அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி

    “ பார்த்து பார்த்து படிச்சாரே…” – உதயநிதியை கலாய்த்த துணை சபாநாயகர்

    ”இனி இஷ்டத்துக்கு FOOD REVIEW  பண்ண முடியாது!” –  யூடியூபர்களுக்கு அரசு எச்சரிக்கை

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் நடிக்க வேண்டிய அவசியம் எப்போதும் இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.