Close Menu
    What's Hot

    ”சினிமாக்காரர்களை சந்திக்கும் விஜய்க்கு இதற்கு மட்டும் நேரமில்லையா?”

    நிலநடுக்கத்தால் உருக்குலைந்த வெனிசுலா..!! உதவிக்கரம் நீட்டிய இந்தியா..!! பிரதமர் மோடி இரங்கல்..!!

    “3 ஆண்டுகளாக நோயால் போராடுகிறேன்…” – நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இந்த ஆண்டு மின்கட்டண உயர்வு இருக்காது – வெள்ளை அறிக்கை வெளியிட்டு அமைச்சர் உறுதி
    Featured

    இந்த ஆண்டு மின்கட்டண உயர்வு இருக்காது – வெள்ளை அறிக்கை வெளியிட்டு அமைச்சர் உறுதி

    Editor TN TalksBy Editor TN TalksJune 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 ep
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 25 வருடங்களில் மின்சார வாரியத்தில் நடந்த வரவு செலவு உள்ளிட்ட நிதியினங்கள் முதல் வேலை வாய்ப்பு குறித்த வெள்ளை அறிக்கையினை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டு விளக்கமளித்தார். 

    மின்வாரியத்தின் மொத்தக் கடன் ரூ.2.47 லட்சம் கோடியாக உள்ளது

    கடந்த 5 வருடங்களில் ரூ.87399 கோடி கடன் பெற்றும் மின்வாரியம் மேம்படுத்தப்படவில்லை

    கடந்த 5 வருடங்களில்தான் செலவும் அதிகம், கடனும் அதிகம்.

    மின்வாரியத்தின் வருவாய் அதிகரித்துள்ள நிலையில் கடனும் அதிகரித்துள்ளது

    புதிதாக டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்படவில்லை, பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. ஆனால் செலவு உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டிற்கு அதிகபட்சமாக 21,300 மெகாவாட் மின்சாரம் தேவையுள்ள நிலையில், தமிழ்நாடுமின்சார வாரியம் மூலமாக3495 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழ்நாட்டிற்குள் 4246 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது

    மத்தியத் தொகுப்பில் இருந்து 13,566 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாடு வாங்குகிறது

    குறுகிய கால ஒப்பந்தம் மூலம் மின்சாரம் யூனிட்டிற்கு ரூ.8.91 கொடுத்து வாங்குகிறோம்

    தினசரி மின்சாரம் வாங்கும் நிலைகளில் அதிகம் செலவு ஏற்படுகிறது

    தமிழ்நாட்டுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.21 கொடுத்து எல்லாம் வாங்கியுள்ளனர்

    நீண்டகால ஒப்பந்தம் மூலம் யூனிட் ஒன்றுக்கு  ரூ.6 வீதம் மின்சாரத்தை வாங்க முடியும்.

    நீண்டகால ஒப்பந்தம் மூலம் மின்சாரம் வாங்கினால் ரூ.215 கோடி மிச்சமாகும்

    தவெக ஆட்சியில் நீண்டகால ஒப்பந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மின்சாரம் கொள்முதல்

    தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 1.40 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்

    ஆனால் 74714 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 65,921 பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளது.

    கடந்த2015 -25 வரை அதாவது 10 வருடங்களில் 20,240 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்

    அடுத்த 5 வருடங்களில் 16,782 பேர் பணி ஓய்வு பெறுகின்றனர்

    கடந்த 25 வருடங்களில் 2011- 2016இல் தான் 9729பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்

    2001-2006இல் மின்வாரியத்தில் சுமார் 93 ஆயிரம் பேர் பணியில் இருந்தனர்

    கடந்த திமுக ஆட்சியில் 9136 பேர் பணி ஓய்வு பெற்ற நிலையில், 343 பேர் மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்

     மின்கட்டண உயர்வுக்குப் பிறகு திமுக ஆட்சியில் வருவாய் 100 சதவீதம் உயர்ந்தது

    திமுக ஆட்சியில் ரூ.87,399 கோடி கடன் பெற்றிருந்தாலும்,  வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படவில்லை.

    தமிழ்நாடு மின்வாரியத்தில் ஊழியர்களின் சம்பளத்துக்கு  பெரிய செலவு இல்லை

    கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட மின் தேவை 5 மடங்கு அதிகரித்து உள்ளது

    கடந்த 25 ஆண்டுகளில் எந்த பெரிய அளவிலான மின்னுற்பத்தி  திட்டத்தையும் அரசு செய்யவில்லை. தனியார் மட்டுமே மின்னுற்பத்தியை பெரிய அளவில் தொடங்கியுள்ளனர்.

    தனியார் நிறுவனங்கள் 40,000 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்கிறார்கள்

    தனியார் அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது,  மின்வாரியம் ஏன் உற்பத்தி செய்யவில்லை.

    ஊழியர் நியமனத்தில் கவனம் செலுத்தாமல் வேறு விஷயங்களில் திமுக ஆட்சியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

    திமுக ஆட்சியில் மின்சாரம் கொள்முதல் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்துள்ளனர். உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தவில்லை.

    சோலார் மின்சாரம் ஒரு யூனிட்டிற்கு ரூ6.16 என மின்வாரியம் அதிகமாக கொள்முதல் செய்துள்ளது.

    இதுவரை இடைத்தரகர்கள் மூலமாகவே மின்சார கொள்முதல் நடந்து உள்ளது.

    இதனால் சோலார் மின்சாரத்துக்கு அதிகம் செலவிடப்பட்டுள்ளது.

    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தமிழ்நாடு அரசு சொந்த முதலீடு செய்யப்படவில்லை.

    முதற்கட்டமாக  மின்வாரியத்தில் 15,000 பேர் இந்த ஆண்டுக்குள் பணியில் சேர்க்கப்படுவார்கள்

    2021-இல் திமுக ஆட்சியில் 5391 கேங்மேன்கள் பணிக்கு எடுக்கப்பட்டாலும் நிதித்துறை ஒப்புதல் வழங்கவில்லை.

    முதலமைச்சரின் ஒப்புதல் பெறப்பட்டு இவர்கள் அனைவரும்  இந்த ஆண்டு வேலைக்கு எடுக்கப்படுவர்.

    5391 கேங்மேன்களையும் சேர்த்து 20,449 பேர் இந்த ஆண்டு பணிக்கு வருவர்.

    மின்வாரியத்தில் ஊதியம் பெறாமலேயே ஒப்பந்த தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள்

    இந்த ஆண்டு மின்கட்டண உயர்வு இருக்காது.

    மின்வாரியத்திலும் ஆள் சேர்ப்பு, ஒப்பந்தங்களில் Party fund நடந்துள்ளது.

    Electricity Tariff No Tariff Hike Power Bill White Paper
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெரம்பூர் போகணும்.. ஒரு டிக்கெட்..!! பஸ்சில் பயணம் செய்த முதல்வர் விஜய்..!!
    Next Article கேட்டவுடனே ‘ஷாக்’..!! கடன் மட்டும் இத்தனை லட்சம் கோடியாம்..!! மின்சார வாரிய வெள்ளை அறிக்கை வெளியீடு..!!
    Editor TN Talks

    Related Posts

    ”சினிமாக்காரர்களை சந்திக்கும் விஜய்க்கு இதற்கு மட்டும் நேரமில்லையா?”

    June 25, 2026

    நிலநடுக்கத்தால் உருக்குலைந்த வெனிசுலா..!! உதவிக்கரம் நீட்டிய இந்தியா..!! பிரதமர் மோடி இரங்கல்..!!

    June 25, 2026

    “3 ஆண்டுகளாக நோயால் போராடுகிறேன்…” – நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”சினிமாக்காரர்களை சந்திக்கும் விஜய்க்கு இதற்கு மட்டும் நேரமில்லையா?”

    நிலநடுக்கத்தால் உருக்குலைந்த வெனிசுலா..!! உதவிக்கரம் நீட்டிய இந்தியா..!! பிரதமர் மோடி இரங்கல்..!!

    “3 ஆண்டுகளாக நோயால் போராடுகிறேன்…” – நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்

    ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்த 30 இந்திய கப்பல்கள்; இயல்பு நிலைக்கு திரும்பும் போக்குவரத்து!

    4 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை; உலக நாடுகளுக்கு நிம்மதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.