Close Menu
    What's Hot

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி… அதிருப்தியாளர்களை வளைத்துப்போட்டு இபிஎஸ் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“மாணவர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா?” – மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ராகுல் காந்தி கடும் தாக்கு
    Featured

    “மாணவர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா?” – மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ராகுல் காந்தி கடும் தாக்கு

    Editor TN TalksBy Editor TN TalksJune 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிகார மமதையில் மூழ்கியுள்ள மத்திய அரசு, தங்களின் உரிமைகள், நியாயமான தேர்வுகள் மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை கோரி குரல் எழுப்பும் மாணவர்களை “தீவிரவாதிகள்” என அழைக்கும் நிலைக்கு வந்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், , கேள்வித்தாள் கசிவுகள், தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    “தேர்வுத் தாள்கள் கசிந்ததற்கும், பல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டதற்கும் காரணமான ஆட்சியிலேயே, இன்று தங்கள் உரிமைக்காக போராடும் மாணவர்களை தீவிரவாதிகள் என சித்தரிக்கின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.

    மேலும், விவசாயிகளை ‘தொழில்முறை போராட்டக்காரர்கள்‘ என்றும், அரசைக் கேள்வி கேட்பவர்களை ‘தேசவிரோதிகள்‘ என்றும் அழைத்தவர்கள், தற்போது இளைஞர்களையே தீவிரவாதிகள் என முத்திரை குத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

    “அரசை கேள்வி கேட்டால் தேசத் துரோகி என கூறுவது தான் இவர்களின் அரசியல். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்டு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், “கல்வி அமைப்பு இன்று கொள்ளை லாப வணிகமாக மாறியுள்ளது. மலிவான மற்றும் தரமான கல்வியையும், நியாயமான தேர்வு முறையையும் ஒவ்வொரு குழந்தைக்கும் உறுதி செய்யும் வரை நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    Dharmendra Pradhan rahul gandhi Union Education Minister
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎன்.எல்.சி. பங்குளை விற்க முதல்வர் விஜய் எதிர்ப்பு…பிரதமருக்கு கடிதம்!
    Next Article 8 மணி நேர சோதனை… எ.வ.வேலுவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை!
    Editor TN Talks

    Related Posts

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    June 25, 2026

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    June 25, 2026

    எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி… அதிருப்தியாளர்களை வளைத்துப்போட்டு இபிஎஸ் அதிரடி!

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி… அதிருப்தியாளர்களை வளைத்துப்போட்டு இபிஎஸ் அதிரடி!

    வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    பவளவிழா பாப்பா TO அழுகுனிப் பாப்பா – மு.க.ஸ்டாலினை சாடும் தவெக ஐடிவிங்க்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.