Close Menu
    What's Hot

    பழிவாங்கல் நடவடிக்கையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!- நிரபராதி என நிரூபிப்பேன்- எ.வ.வேலு

    ஏஐ புயலில் சிக்கிய இந்திய ஐடி துறை… என்னவாகும் எதிர்காலம்?

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்
    அரசியல்

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    Editor web2By Editor web2June 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Geetha Jeevan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    தமிழகத்தில் 1996-2001-ம் ஆண்டு வரையிலான திமுக. ஆட்சியின் போது தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் அப்போதைய மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி.

    ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 31 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் சொத்து சேர்த்ததாக பெரியசாமி மீதும், அவரது மனைவி எபனேசர் அம்மாள், இவர்களது மகளும் அப்போதைய மாவட்ட ஊராட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன், அவரது கணவர் ஜீவன் ஜேக்கப், கீதா ஜீவனின் அண்ணன் ராஜா, தம்பியும் தற்போதைய மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தூத்துக்குடி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் இருந்த போது, கடந்த 2017-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக என்.பெரியசாமி மரணமடைந்தார். எனினும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கை விசாரித்த  தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குருமூர்த்தி, சொத்துக் குவிப்பு வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறி, கீதாஜீவன், ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து தொகுதி வாக்காளரான சண்முகசுந்தரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். 839 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மறு ஆய்வு மனுவை, தாமதத்தை ஏற்று, விசாரணைக்கு பட்டியலிடக் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், தாமதத்தை ஏற்கக் கோரி சண்முகசுந்தரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

    DisproportionateAssetsCase GeethaJeevan MadrasHighCourt TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு
    Next Article ஏஐ புயலில் சிக்கிய இந்திய ஐடி துறை… என்னவாகும் எதிர்காலம்?
    Editor web2
    • Website

    Related Posts

    பழிவாங்கல் நடவடிக்கையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!- நிரபராதி என நிரூபிப்பேன்- எ.வ.வேலு

    June 25, 2026

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    June 25, 2026

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழிவாங்கல் நடவடிக்கையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!- நிரபராதி என நிரூபிப்பேன்- எ.வ.வேலு

    ஏஐ புயலில் சிக்கிய இந்திய ஐடி துறை… என்னவாகும் எதிர்காலம்?

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.