Close Menu
    What's Hot

    போதைப் பொருள் பயன்படுத்தினேனா? வைரல் வீடியோவுக்கு அமைச்சர் விளக்கம்!

    கவினின் ‘பேர் சொல்லும் பிள்ளை’: கோலாகலமாகத் தொடங்கிய படப்பிடிப்பு!

    தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?: வெங்கட நாராயணா நியமனத்துக்கு நயினார் கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?: வெங்கட நாராயணா நியமனத்துக்கு நயினார் கண்டனம்
    Featured

    தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?: வெங்கட நாராயணா நியமனத்துக்கு நயினார் கண்டனம்

    Editor web1By Editor web1June 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழே தெரியாதவரை தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதற்கு தமிழக பாஜக தலைமை நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தனது எக்ஸ் பதிவில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகச் செயல்பட கர்நாடகாவைச் சேர்ந்த திரு. கே. வெங்கடநாராயணா அவர்களை நியமிக்கவிருப்பதாக திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

    மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட வேண்டிய முக்கியப் பொறுப்பில், தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை எப்படி நியமிக்கலாம்? அன்னைத் தமிழ் மொழியையும், நமது தமிழ் கலாச்சாரத்தையும் முழுமையாக அறியாத ஒருவர் எப்படி தமிழக மக்களின் எண்ணத்தையும், தமிழக அரசின் குரலையும் டெல்லியில் எதிரொலிக்க முடியும்?

    சட்டம் அறிந்த, நாடாளுமன்ற நடப்புகள் அறிந்த தமிழகத்தைச் சார்ந்தோரையெல்லாம் விடுத்து, கர்நாடக முதல்வர் திரு. டி.கே.சிவகுமாரின் நெருங்கிய நண்பரைப் பிரதிநிதியாக நியமிக்கக் காரணம் என்ன? முதல்வர் விஜய் அவர்கள் நடித்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதாலா? அல்லது, காங்கிரஸின் நிர்பந்தமா? கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் பேசி மேகதாது அணைப் பிரச்சனையை முடிக்காமல், டெல்லி வரை கடிதம் எழுதியது போதாதென்று, இன்று கூட்டணிக் கட்சியின் நிர்பந்தத்திற்கு பயந்து, கர்நாடக மாநிலத்தவரை டெல்லிக்கு அனுப்பி தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?

    மாற்று சக்தி என்று கூறி, காங்கிரஸின் கைப்பாவையாகச் செயல்பட்டு, தமிழகத்தை இப்படி வஞ்சிப்பதற்கு திரு. ஜோசப் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்!

    இவ்வாறு நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமனம்!
    Next Article கவினின் ‘பேர் சொல்லும் பிள்ளை’: கோலாகலமாகத் தொடங்கிய படப்பிடிப்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    போதைப் பொருள் பயன்படுத்தினேனா? வைரல் வீடியோவுக்கு அமைச்சர் விளக்கம்!

    June 26, 2026

    தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமனம்!

    June 26, 2026

    அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக சீமான்?- அரசியல் களத்தில் பரபரப்பு!

    June 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போதைப் பொருள் பயன்படுத்தினேனா? வைரல் வீடியோவுக்கு அமைச்சர் விளக்கம்!

    கவினின் ‘பேர் சொல்லும் பிள்ளை’: கோலாகலமாகத் தொடங்கிய படப்பிடிப்பு!

    தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?: வெங்கட நாராயணா நியமனத்துக்கு நயினார் கண்டனம்

    தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமனம்!

    அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக சீமான்?- அரசியல் களத்தில் பரபரப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.