Close Menu
    What's Hot

    மத்திய கேபினெட்டில் மாற்றம்..!! நிர்மலாவுக்கு பதில் நிதி துறையை ஏற்கிறாரா சக்திகாந்த தாஸ்?

    ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வந்துவிட்டது..!! அன்பில் மகேஷ் பரபரப்பு பதிவு..!!

    தமிழ் மக்களின் இதயங்களை வென்றவர் கே.பாக்யராஜ் ; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவு..! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!
    Featured

    பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவு..! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

    Editor web4By Editor web4June 27, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 18
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில்,

    முதல்வர் விஜய் : 

    முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.

    அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

    திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

    மு.க.ஸ்டாலின் : 

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!

    இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள். தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.

    சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவு செய்ததற்கான விழாவில்  கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.

    திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு. அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்” என தெரிவித்துள்ளார்.

    பிரேமலதா விஜயகாந்த் : 

    தேமுதிக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ பன்முகத் திறமைகளால் தமிழ் திரையுலகில் தனித்துவமான முத்திரை பதித்த திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான திரு. கே. பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது.

    தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற தரமான படைப்புகளை வழங்கி, தனது தனித்துவமான திரைக்கதை அமைப்பு, வசன நடை மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். அவருடைய மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

    மறைந்த கே. பாக்யராஜ் அவர்களுக்கும், நமது கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் நீண்டகால அன்பும் நட்பும் நிலவியது. குறிப்பாக ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றிய நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை. கேப்டன் அவர்களின் கலைப் பயணத்தில் பாக்யராஜ் அவர்கள் வகித்த நட்பும் பங்களிப்பும் என்றும் நினைவுகூரப்படும்” என தெரிவித்துள்ளார்.

    வி.கே.சசிகலா : 

    பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான அன்பு சகோதரர் திரு.பாக்யராஜ் அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

    பல்துறை வித்தகரான திரு.பாக்யராஜ் அவர்கள் அரை நூற்றாண்டாக தமிழ் சினிமா உலகில் மிகவும் சிறப்பாக பணியாற்றியவர். வாழ்நாள் சாதனையாளர் விருது, பிலிம்பேர் விருதுகளை பெற்று இருக்கிறார். திரைப்படத்துறையில்  பன்முகத்தன்மை கொண்ட திரு.பாக்யராஜ் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகராக இருந்தவர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். திரு.பாக்யராஜ் அவர்கள் அரசியலில் எங்களோடு பயணித்த நாட்களை  இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி : 

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய

    திரு. K பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு. பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.

    மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்களும் திரு. பாக்யராஜ் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார். இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்” என தெரிவித்துள்ளார்.

    Actor Bhagyaraj Director Bhagyaraj K Bhagyaraj tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘திரைக்கதை அரசர்’ பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை..!! முதல்வர் விஜய் அறிவிப்பு..!!
    Next Article கே.பாக்யராஜ் இறுதிப்பயணத்துக்கு அரசு மரியாதை – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு
    Editor web4

    Related Posts

    மத்திய கேபினெட்டில் மாற்றம்..!! நிர்மலாவுக்கு பதில் நிதி துறையை ஏற்கிறாரா சக்திகாந்த தாஸ்?

    June 27, 2026

    ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வந்துவிட்டது..!! அன்பில் மகேஷ் பரபரப்பு பதிவு..!!

    June 27, 2026

    தமிழ் மக்களின் இதயங்களை வென்றவர் கே.பாக்யராஜ் ; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மத்திய கேபினெட்டில் மாற்றம்..!! நிர்மலாவுக்கு பதில் நிதி துறையை ஏற்கிறாரா சக்திகாந்த தாஸ்?

    ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வந்துவிட்டது..!! அன்பில் மகேஷ் பரபரப்பு பதிவு..!!

    தமிழ் மக்களின் இதயங்களை வென்றவர் கே.பாக்யராஜ் ; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

    ஒரே மாதத்திற்குள் 2 ராஜாக்களை இழந்து விட்டது நம் தமிழ் சினிமா..!! கமல்ஹாசன் உருக்கம்..!!

    இஸ்லாமை தழுவியவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து சமூகநீதிக்கு எதிரானது – பேராசிரியர் ஜவாஹிருல்லா அதிருப்தி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.