தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கு.செல்வப்பெருந்தகை பதவி வகித்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், கொறடாவுமான மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
