Close Menu
    What's Hot

    திருப்பூர் ரோட்டரி சங்க நிகழ்வால் பரபரப்பு ;  செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்வில் மது, மாது என அலப்பறை?

    IAS-IPS மாநாடு சம்பிரதாயமா? சாதனையா? முதல்வர் விஜய்யை வம்பிழுத்த ஆர்.பி உதயகுமார்..!!

    உதவி பேராசிரியர் பணி நியமனத் தேர்வு முறைகேடுகள் – விசராணை நடத்த விசிக வலியுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»‘இனி எல்லாமே MRP-க்குள்’.. TASMAC விற்பனையில் அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு..!!
    Featured

    ‘இனி எல்லாமே MRP-க்குள்’.. TASMAC விற்பனையில் அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு..!!

    editor5By editor5June 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 21 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசு டாஸ்மாக் நிர்வாகத்தில் முக்கிய சீர்திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. மதுபான பாட்டில்களுக்கு தனியாக ரூ.10 மதிப்பிலான ஸ்டிக்கர் ஒட்டும் முறை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. சுற்றுச்சூழல் வரி இனி தனியாக வசூலிக்கப்படாமல், பாட்டிலின் மொத்த விற்பனை விலை (எம்.ஆர்.பி)க்குள் உள்ளடக்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார்.

    கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதில் முதன்மையானது, பாட்டில்களுக்கு தனியாக ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டும் வழக்கம் முழுமையாக நிறுத்தப்படும். சுற்றுச்சூழல் வரியை இனிமேல் தனியே வசூலிக்காமல், மதுபானத்தின் ஒட்டுமொத்த விலைக்குள் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் ஒவ்வொரு ரூபாய் வருவாயும் தனியார் கைகளுக்கு செல்லாமல் தடுக்க இந்த அரசு உறுதியாக உள்ளது” என்றார்.

    மேலும், டாஸ்மாக் பாட்டில்களின் விலை நிர்ணயம் தொடர்பாக புதிய சட்டத்தை விரைவில் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய உத்தரவை மீறி வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக ரூ.10 வசூல் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதே தவறை மீண்டும் செய்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்படும் வரை கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தார்.

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ள நிலையில், இத்தகைய முறைகேடுகளுக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விற்பனையாளர்கள் மீது உரிய தண்டனை வழங்கப்படுகிறது. டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளான சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

    கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், ஊதிய உயர்வு பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்தார். டாஸ்மாக்கை தனியார்மயமாக்கும் எந்த எண்ணமும் அரசுக்கு இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவற்றை வெளிப்படையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. “ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காகவே குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறோம். வெள்ளை அறிக்கை எதற்கு?” என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கும், இடம் மாற்றம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். 717 கடைகள் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் அத்தகைய கடைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம் டாஸ்மாக் நிர்வாகத்தை மேலும் ஒழுங்குபடுத்தி, பொதுமக்கள் நலனை பாதுகாக்க அரசு உறுதியுடன் செயல்படும் என்று அமைச்சர் விக்னேஷ் வலியுறுத்தினார். இந்த அறிவிப்புகள் டாஸ்மாக் துறையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தங்களாக பார்க்கப்படுகின்றன.

    minister vignesh Tasmac
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாக். – ஆப்கான் எல்லையில் அதிரடி ராணுவ நடவடிக்கை!. 29 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
    Next Article மனமகிழ் மன்றங்கள் தொடங்கும் கட்டணம் இரட்டிப்பு..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!
    editor5

    Related Posts

    திருப்பூர் ரோட்டரி சங்க நிகழ்வால் பரபரப்பு ;  செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்வில் மது, மாது என அலப்பறை?

    June 29, 2026

    IAS-IPS மாநாடு சம்பிரதாயமா? சாதனையா? முதல்வர் விஜய்யை வம்பிழுத்த ஆர்.பி உதயகுமார்..!!

    June 29, 2026

    உதவி பேராசிரியர் பணி நியமனத் தேர்வு முறைகேடுகள் – விசராணை நடத்த விசிக வலியுறுத்தல்

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் ரோட்டரி சங்க நிகழ்வால் பரபரப்பு ;  செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்வில் மது, மாது என அலப்பறை?

    IAS-IPS மாநாடு சம்பிரதாயமா? சாதனையா? முதல்வர் விஜய்யை வம்பிழுத்த ஆர்.பி உதயகுமார்..!!

    உதவி பேராசிரியர் பணி நியமனத் தேர்வு முறைகேடுகள் – விசராணை நடத்த விசிக வலியுறுத்தல்

    முதலமைச்சர் விஜய் தலைமையில்.. தொடங்கியது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மாநாடு..!!

    வரத்து குறைவு.. தாறுமாறாக ஏறிய விலை..!! கேரட் அறுவடையில் விவசாயிகள் தீவிரம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.