தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்க உள்ள விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், பதவியை ஏற்க அல்ல, பொறுப்பை ஏற்கச் செல்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தலைவனாக அல்ல… உங்கள் தம்பியாகவும், அண்ணனாகவும், தோழனாகவும் இருந்து இந்தப் பயணத்தைத் தொடங்குகிறேன் எனக் கூறியுள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் என்பது ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல; நம் மண், மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் மகத்தான இயக்கம். அந்த இயக்கத்தை மேலும் பலப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு.
2026-ல் ஆட்சியில் பங்கு பெற்றோம். இப்போது நம் அடுத்த இலக்கு – 2029.
இந்தியாவின் ஆட்சியை மக்களுக்கு மீட்டுத் தந்து, நம் தலைவர் ராகுல் காந்தி அவர்களை இந்தியாவின் பிரதமராக்க ஒன்றிணைந்து உழைப்போம் எனக் கூறியுள்ள மாணிக்கம் தாகூர் எம்.பி,
வாங்க…. இயக்கத்தை பலப்படுத்துவோம். மக்களோடு இணைந்து பயணிப்போம். 2029 வெற்றிக்கான அடித்தளத்தை இன்று தொடங்கி அமைப்போம். ஒன்றிணைவோம்… உழைப்போம்… வெல்வோம் என காங்கிரஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
