Close Menu
    What's Hot

    அயர்லாந்து தொடரில் சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை?. பயிற்சியாளர் விளக்கம்!.

    பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் சந்திப்பு..!! ஜூலை 2-வது வாரத்தில் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்..!!

    முதியோருக்கு பராமரிப்பு வழங்குவது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பு – ஆளுநர் அர்லேகர் வலியுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பாஜக அரசை கண்டிக்கும் அதிமுக; என்.எல்.சி விவகாரத்தில் புது ட்விட்ஸ்ட்
    Featured

    பாஜக அரசை கண்டிக்கும் அதிமுக; என்.எல்.சி விவகாரத்தில் புது ட்விட்ஸ்ட்

    Editor TN TalksBy Editor TN TalksJune 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    NLC நிறுவனத்தின் பங்குகளை விற்க முயலும் மத்திய அரசுக்கும், NLC நிர்வாகத்திற்கும் அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் போல் NLC பங்குகளை தமிழ் நாடு அரசே வாங்க முதலமைச்சரையும் வலியுறுத்தியுள்ளது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் எனப்படும் NLC நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முக்கியமான பொதுத் துறை நிறுவனமாகும். நவரத்தினா அந்தஸ்து பெற்றுள்ள இந்நிறுவனம் தனது சிறப்பான செயல்பாடுகளின் மூலம் நடப்பாண்டில் 3,769 கோடிரூபாயை லாபமாக ஈட்டி உள்ளது. இப்படி லாபகரமாக இயங்கி வரும் NLC நிறுவனத்தின் மூன்று சதவீத பங்குகளை, பங்குச் சந்தை மூலம் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு நடுவடிக்கை மேற்கொண்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    2006-ஆம் ஆண்டு NLC நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முயற்சித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த புரட்சித் தலைவி அம்மா எச்சரித்ததன் விளைவாக, அந்தப் பங்கு விற்பனையை அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முழுமையாகக் கைவிட்டது.

    2013-ஆம் ஆண்டு SEBI விதிமுறைகளைக் காரணம் காட்டி அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முயற்சித்த போது, புரட்சித் தலைவி அம்மா  தலைமையிலான தமிழக அரசு, கடும் நிதி நெருக்கடிக்கு இடையில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 3.56% NLC பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் வாங்கி, NLC நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய காங்கிரஸ் அரசின் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

    இந்நிலையில் மீண்டும் தற்போது மத்திய அரசு NLC  நிறுவனத்தின் மூன்று சதவீத பங்குகளை விற்பனை செய்ய நடுவடிக்கை எடுத்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    மத்திய அரசு NLC நிறுவனத்தை தனியார்மயமாக்கும் போக்கினை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    கடந்த காலங்களைப் போல், தற்போதும் NLC நிறுவன பங்கு விற்பனையை தடுத்து நிறுத்த அதிமுக போராடும்

    மத்திய அரசின் கொள்கை முடிவை எதிர்த்துப் போராடும் NLC ஊழியர் சங்கங்கள், அதிகாரிகள் சங்கம், பொதுமக்கள் உள்யட்டு அனைவருக்கும், அனைத்திறிதிய அண்ணா திராவிடு முன்னேற்றக் கழகம் முழு ஆதரவை வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், கடந்த 2013இல் NLC பங்குகளை அதிமுக அரசு வாங்கியது போல்,  தற்போதைய தவெக அரசும் அரசும், NLC நிறுவனப் பங்குகளை வாங்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்,

    NLC பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பதைத் தடுக்க உடனடி நடுவடிக்கைகளை தவெக அரசின் முதலமைச்சர் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    AIADMK BJP Neyveli NLC India
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபதவியை ஏற்க அல்ல… பொறுப்பை ஏற்கச் செல்கிறேன் – மாணிக்கம் தாகூர் ட்விட்
    Next Article “அஞ்சலி செலுத்தும் இடம் கேளிக்கை கூடாரமாக மாறி விட்டது” – நடிகை  ராதிகா வேதனை
    Editor TN Talks

    Related Posts

    அயர்லாந்து தொடரில் சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை?. பயிற்சியாளர் விளக்கம்!.

    June 29, 2026

    பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் சந்திப்பு..!! ஜூலை 2-வது வாரத்தில் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்..!!

    June 29, 2026

    முதியோருக்கு பராமரிப்பு வழங்குவது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பு – ஆளுநர் அர்லேகர் வலியுறுத்தல்

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அயர்லாந்து தொடரில் சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை?. பயிற்சியாளர் விளக்கம்!.

    பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் சந்திப்பு..!! ஜூலை 2-வது வாரத்தில் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்..!!

    முதியோருக்கு பராமரிப்பு வழங்குவது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பு – ஆளுநர் அர்லேகர் வலியுறுத்தல்

    தமிழகத்தில் முதலீடு செய்யும் 3 தைவான் நிறுவனங்கள்!. 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

    செசல்ஸில் தமிழர்கள் கட்டிய ஆலயம்..!! நவசக்தி விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.