Close Menu
    What's Hot

    அயோத்தி ராமர் கோவில் பண மோசடி வழக்கு!. வாதாடும் வழக்கறிஞர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

    துணைவேந்தர் நியமன அதிகாரத்தை  எதிர்த்த வழக்கு; இறுதி விசாரணை  தள்ளிவைப்பு

    “இது வெறும் டிரைலர்தான்… ” – எச்சரிக்கும் சேகர் பாபு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீர் உயிரிழப்பு?. போலீசார் விசாரணை!
    Featured

    சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீர் உயிரிழப்பு?. போலீசார் விசாரணை!

    Editor web3By Editor web3June 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cudalore child dead
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அருகே போலியோ சொட்டு மருந்து உட்கொண்ட நிலையில், ஒன்றரை வயதுக் குழந்தை திடீரென உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    நல்லாத்தூர் கொளுத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (27), ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ராஜம். இந்தத் தம்பதியருக்கு ஹரிஹரன் என்ற ஒன்றரை வயது மகன் இருந்தார். நேற்று நல்லாத்தூர் பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமிற்குத் தனது குழந்தையை ராஜம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தைக்குச் சொட்டு மருந்து வழங்கப்பட்ட பின்னர், அவர்கள் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

    வீட்டிற்கு வந்ததும் குழந்தைக்குப் பால் கொடுத்து உறங்க வைத்துள்ளனர். ஆனால், வழக்கமான நேரத்தைத் தாண்டியும் குழந்தை நீண்ட நேரமாகத் தூங்கிக் கொண்டிருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் குழந்தையை எழுப்ப முயன்றபோது, குழந்தை எவ்வித அசைவும் இன்றி இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாகத் தூக்கணாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து தந்தை ராஜா அளித்த புகாரின் பேரில், தூக்கணாம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் உயிரிழப்பிற்கான உண்மையான காரணம், பிரேதப் பரிசோதனை அறிக்கை முழுமையாக வந்த பிறகே தெரியவரும் என்று மருத்துவக் குழுவினர் முதற்கட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

    one-and-a-half-year-old child police investigating Polio polio drops Sudden death
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅகங்காரம் அடங்கும்; ரீல்ஸ் ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டம்
    Next Article கோடிக்கணக்கில் பொதுமக்கள் பணம் மோசடி; பெண் காவல் ஆய்வாளரின் முன் ஜாமீன் தள்ளுபடி
    Editor web3
    • Website

    Related Posts

    அயோத்தி ராமர் கோவில் பண மோசடி வழக்கு!. வாதாடும் வழக்கறிஞர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

    June 29, 2026

    துணைவேந்தர் நியமன அதிகாரத்தை  எதிர்த்த வழக்கு; இறுதி விசாரணை  தள்ளிவைப்பு

    June 29, 2026

    “இது வெறும் டிரைலர்தான்… ” – எச்சரிக்கும் சேகர் பாபு

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அயோத்தி ராமர் கோவில் பண மோசடி வழக்கு!. வாதாடும் வழக்கறிஞர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

    துணைவேந்தர் நியமன அதிகாரத்தை  எதிர்த்த வழக்கு; இறுதி விசாரணை  தள்ளிவைப்பு

    “இது வெறும் டிரைலர்தான்… ” – எச்சரிக்கும் சேகர் பாபு

    அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க.வை, மக்கள் வெளுக்கப் போவது உறுதி – தவெக

    “கோட்டையிலேயே ரீல்ஸ் போட்டவர்தானே நீங்கள்?”- ஸ்டாலினை விளாசும் தவெக

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.