Close Menu
    What's Hot

    2024 ஜூன் 29 ஃபிளாஷ் பேக்!. டி20 உலகக்கோப்பையோடு விடைபெற்ற RO-KO!

    ”ஆவின் பால்  உற்பத்தியை முடக்குவதா..?” – நயினார் நாகேந்திரன் கண்டனம்

    சூர்யா அரசியலுக்கு வரமாட்டார்..!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரசிகர் மன்றம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோடிக்கணக்கில் பொதுமக்கள் பணம் மோசடி; பெண் காவல் ஆய்வாளரின் முன் ஜாமீன் தள்ளுபடி
    Featured

    கோடிக்கணக்கில் பொதுமக்கள் பணம் மோசடி; பெண் காவல் ஆய்வாளரின் முன் ஜாமீன் தள்ளுபடி

    Editor TN TalksBy Editor TN TalksJune 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 shieela
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குறைந்த விலை​யில் தங்கம் வழங்குவதாகக் கூறி 20 கோடி ரூபாய் வரை மோசடி செய்த விவ​காரத்​தில் பெண் காவல் ஆய்​வாளருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    ராயபுரம் மகளிர் காவல் நிலை​யத்​தில் ஆய்​வாள​ராகப் பணி​யாற்​றிய​ ஷீலா மேரி தனது உறவின​ரான பிரபு மணி மூல​மாக ஒரு நிறு​வனத்தை தொடங்கி அதன் மூலம் தங்​கத்​தில் முதலீடு செய்​தால் அதிக லாபம் சம்​பா​திக்​கலாம், குறைந்த விலை​யில் தங்க காசுகள்  என பல்​வேறு முதலீட்டு திட்​டங்​களை அறி​முகம் செய்​துள்​ளார்.

    கடந்த 2023 மற்​றும் 2024-ம் ஆண்டு வரை 200-க்​கும் மேற்​பட்​டோர் பிரபு மணி நடத்தி வந்த நிறு​வனத்​தில் முதலீடு செய்​துள்​ளனர். பிரபு மணி பெரும்​பாலும் ஆய்​வாளர் ஷீலா மேரி​யின் காவல்​துறை வாக​னத்​தில் வைத்​து, தங்​கக் காசுகளை வழங்​கி​யுள்​ளார். குறிப்​பாக  இவர்களிடம் போலீ​ஸாரும், போலீஸ் அதி​காரி​கள் பலரும் கோடிக்​கணக்​கில் பணத்தை முதலீடு செய்​துள்​ளனர்.

    இந்​நிலை​யில், இந்​நிறு​வனத்தை 2024 இறு​தி​யில் மூடி​விட்டு பிரபுமணி தலைமறை​வாகி​விட்​டார். இவரிடம் முதலீடு செய்து ஏமாற்​றப்​பட்​ட​வர்​கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸாரிடம் புகார் அளித்​தனர்.

    மொத்​தம் 20 கோடி வரை இழந்​துள்​ள​தாக அவர்​கள் தெரி​வித்​தனர். இதையடுத்து முதல் கட்​ட​மாக பிரபுமணி மீது போலீ​ஸார் வழக்​குப் பதிந்​தனர். தொடர்ந்து அவர் கைது செய்​யப்​பட்​டார்.

    பெண் காவல் ஆய்​வாளர் ஷீலா மேரி​யும் மோசடிக்கு உடந்​தை​யாக இருந்​தது உறுதி செய்​யப்​பட்​ட​தால், அவர் மீதும் பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர்.

    இந்​நிலை​யில், தங்க நகை மோசடி வழக்கு விவ​காரத்​தில் சிக்​கிய காவல் ஆய்​வாளர் ஷீலா மேரியை பணி​யிடை நீக்​கம் செய்யப்பட்ட நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி குமரப்பன் முன்பு நடைபெற்றது.

    அப்போது காவல்துறை தரப்பு வழக்கறிஞர் ஆய்வாளர்ஷீலா மேரிக்கு முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதி ஆய்வாளரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

    anticipatory bail Bail Rejected Fraud Case Woman Police Inspector
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசொட்டு மருந்து கொடுக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீர் உயிரிழப்பு?. போலீசார் விசாரணை!
    Next Article செசல்ஸில் தமிழர்கள் கட்டிய ஆலயம்..!! நவசக்தி விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்..!!
    Editor TN Talks

    Related Posts

    2024 ஜூன் 29 ஃபிளாஷ் பேக்!. டி20 உலகக்கோப்பையோடு விடைபெற்ற RO-KO!

    June 29, 2026

    ”ஆவின் பால்  உற்பத்தியை முடக்குவதா..?” – நயினார் நாகேந்திரன் கண்டனம்

    June 29, 2026

    சூர்யா அரசியலுக்கு வரமாட்டார்..!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரசிகர் மன்றம்..!!

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2024 ஜூன் 29 ஃபிளாஷ் பேக்!. டி20 உலகக்கோப்பையோடு விடைபெற்ற RO-KO!

    ”ஆவின் பால்  உற்பத்தியை முடக்குவதா..?” – நயினார் நாகேந்திரன் கண்டனம்

    சூர்யா அரசியலுக்கு வரமாட்டார்..!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரசிகர் மன்றம்..!!

    MLA-க்கள் purchase; Washing Machine அரசியல் – தவெகவுக்கு மக்கள் பாடம்; உதயநிதி

    விம்பிள்டனின் ‘மிகவும் அழகிய வீராங்கனை’!. இந்த ஆண்டு விளையாடாதது ஏன்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.