Close Menu
    What's Hot

    ஆயிரக் கணக்கான இடங்கள் காலி; அரசு கல்லூரிகளில் சேர்க்கையை முறைப்படுத்துக – அரசுக்கு மமக வலியுறுத்தல்

    வெளியே வராத ஜான் ஆரோக்கியசாமி.. இப்போது திடீர் என்ட்ரி.. காரணம் என்ன?

    ஃபிஃபா உலகக் கோப்பை 2026: “ஜெர்மனி இனி முதல் தர அணி அல்ல” – பயிற்சியாளர் நாகல்ஸ்மேன் வேதனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மறைந்த இயக்குநர் பாக்யராஜ் கடைசியாக யோசித்த படத்தின் பெயர் ’மயான கொள்ளை’..! உருக்கத்துடன் இயக்குநர் பார்த்திபன்..!
    Featured

    மறைந்த இயக்குநர் பாக்யராஜ் கடைசியாக யோசித்த படத்தின் பெயர் ’மயான கொள்ளை’..! உருக்கத்துடன் இயக்குநர் பார்த்திபன்..!

    Editor web4By Editor web4June 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 23
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த இரு தினங்களுக்கு முன்பு இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் தொடங்கி பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு மரியாதை செய்திருந்தனர்.

    பாக்யராஜின் சிஷ்யனான பார்த்திபன், அவரது இறுதி நொடி வரை உடனிருந்தார். இந்த நிலையில், இன்று மீண்டும் பாக்யராஜ் இல்லத்திற்கு சென்றவர், மரியாதை செலுத்தினார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

    ” கடைசி வரை யாரோ? பாடிய
    கண்ணதாசனுக்கே காடு வரை தானே?
    பாரதிராஜா சாருக்கும் அப்படித்தான் மதுரை காட்டுராடு வரை சென்றேன் -அதுவே விளிம்பு. அதற்கு பின் மண்ணுக்குள் அவர் மட்டும் சென்று விட்டார். இன்று என் குருநாதர் பாக்யராஜ் சாருக்காக பெசன்ட்நகர் மின் தகனம் வரை.

    எழுதுதட்டை அதில் சில வெண்காகிதங்கள் அதில் ‘அன்புடன் உங்கள் பாக்யராஜ்’ கொட்டை எழுத்துக்களில் அவர் இதயப் பகுதியில் நான் வைத்தது ‘கடைசிவரை’ சென்றது. கால்மாட்டில் தீபம், நெஞ்சில் கற்பூரம் ஏற்றிய பின் அந்தத் தீக்குகை நோக்கிப் பயணம் ஆயுத்தமானது. ஒரு சக முயற்சியாளராக அறிமுகமான பாக்யராஜை
    குருவாக ஏற்றுக்கொண்டபின், அடிபணிந்தே பணிப்புரிந்தேன்.

    தூக்கத்தை பட்டிளி போட்டே பழக்கப்பட்டவனாதலால் சூரியனுடனே கிளம்பி ஆபிஸுக்கு சென்று விடுவேன். பாக்யராஜ் சாரின் அறையை சுத்தப்படுத்தி அவர் அமரும் இடத்தில் Pad paper pen -ஐ தயார் நிலையில் வைப்பேன். இப்போதும் அந்த P P P அவரது இதயத்திற்குப் பக்கத்தில் வைத்திருக்கிறேன். அது நகர்ந்து அந்த
    தீப்பிழம்புக்குள். அஸ்தி பெற காத்திருக்கும் சாந்தனு பக்கத்தில் ஆறுதல் சொல்ல வந்தமர்ந்திருக்கும் தயாரிப்பாளர் திரு கண்ணன் ரவியிடம் “ அப்போது நீங்கள் செய்தது (ராவணக்கோட்டம் தயாரித்தது)பத்தாது,
    இப்போது சாந்தனுவை வைத்து படம் எடுங்கள்” என்றேன்.

    அந்த இடத்தில் அதைப் பேசுவது சரியா தவறா என்ற யோசனையை மீறி. பாக்யராஜ் சாருக்கு நன்றி கடனாக சாந்தனுவை வைத்து ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ எடுத்தவன் நான். மீண்டும் சாந்தனு வெற்றி பெற வேண்டுகிறேன். திறமையை மீறி வெற்றி மட்டுமே இங்கு கொண்டாடப்படும் ! பூத உடல் சாம்பலானாலும் புகழுடல் நிலைக்கப் போகும் பாக்யராஜ் சார் கடைசியாக யோசித்த படத்தின் பெயர் ‘ மயான கொள்ளை’ என அவரது இன்றைய உதவியாளர் கூறியதாக பதிவிட்டுள்ளார்.

    bhakyaraj Kollywood parthiban Tamil Cinema
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெங்கல்பட்டு : பாழடைந்த கிணற்றில் கிடைத்த ராக்கெட் லாஞ்சர்..! வெடிக்கச் செய்து செயலிழக்க செய்த ராணுவத்தினர்..!
    Next Article பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு ரூ.5 இலட்சம் போதைப் பொருட்கள் கடத்தல் –  4 பேர் கைது; 2 சொகுசு கார்கள் பறிமுதல்
    Editor web4

    Related Posts

    ஆயிரக் கணக்கான இடங்கள் காலி; அரசு கல்லூரிகளில் சேர்க்கையை முறைப்படுத்துக – அரசுக்கு மமக வலியுறுத்தல்

    June 30, 2026

    வெளியே வராத ஜான் ஆரோக்கியசாமி.. இப்போது திடீர் என்ட்ரி.. காரணம் என்ன?

    June 30, 2026

    ஃபிஃபா உலகக் கோப்பை 2026: “ஜெர்மனி இனி முதல் தர அணி அல்ல” – பயிற்சியாளர் நாகல்ஸ்மேன் வேதனை

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆயிரக் கணக்கான இடங்கள் காலி; அரசு கல்லூரிகளில் சேர்க்கையை முறைப்படுத்துக – அரசுக்கு மமக வலியுறுத்தல்

    வெளியே வராத ஜான் ஆரோக்கியசாமி.. இப்போது திடீர் என்ட்ரி.. காரணம் என்ன?

    ஃபிஃபா உலகக் கோப்பை 2026: “ஜெர்மனி இனி முதல் தர அணி அல்ல” – பயிற்சியாளர் நாகல்ஸ்மேன் வேதனை

    ஓடும் ரயிலில் பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய நபர்!. வைரலாகும் வீடியோ!. ரயில்வே அதிரடி நடவடிக்கை!

    எங்களைச் சீண்டுபவர்களுக்கு அதே வேகத்தில் பதில்சொல்வோம் – மாணிக்கம் தாகூர் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.