Close Menu
    What's Hot

    ” மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் ஊழல்” – விசிக ‘பகீர்’ குற்றச்சாட்டு

    ஆட்சி அமைக்க திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து குறுக்கு வழியில் திட்டம் –அமைச்சர் நிர்மல்குமார் பகீர்

    வெயிலை எதிர்கொள்ள புது ஐடியா!. ‘நீர் பீரங்கி’ ஸ்ப்ரே! வைரலாகும் ஐரோப்பிய ஸ்டைல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஓடும் ரயிலில் பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய நபர்!. வைரலாகும் வீடியோ!. ரயில்வே அதிரடி நடவடிக்கை!
    Featured

    ஓடும் ரயிலில் பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய நபர்!. வைரலாகும் வீடியோ!. ரயில்வே அதிரடி நடவடிக்கை!

    Editor web3By Editor web3June 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    harassed train travelling
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஓடும் ரயிலில் தனக்கு ஆபாச சைகை காட்டிய நபரின் செயலை அந்த பெண் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட  நிலையில், இந்திய ரயில்வே இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    ரூபாலி தீட்சித் என்ற என்ற பயனர், போல்பூர் சந்திப்பு மற்றும் டன்குனி இடையே இயங்கும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, ரயிலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த ஒரு நபர், இவரை நோக்கித் தொடர்ந்து ஆபாசமான சைகைகளைச் செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரூபாலி, உடனடியாகத் தனது மொபைல் போன் மூலம் அந்த நபரின் அநாகரிகச் செயலை வீடியோவாகப் பதிவு செய்தார். அந்த வீடியோவில், “இப்படிப்பட்ட மனிதர்களும் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள்” என்று அவர் வேதனையுடன் கூறுவது கேட்கிறது.

    https://x.com/GhumakkadLaali/status/2071614986259202085?

    பின்னர் இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ரூபாலி, “இன்று நான் விவேக் எக்ஸ்பிரஸில் பயணம் செய்தபோது, ரயிலின் கதவருகே நின்றிருந்த என்னை நோக்கி இந்த நபர் மிகவும் மோசமாக நடந்துகொண்டார்” என்று பதிவிட்டு, அந்த நபர் எஸ்.எம்.வி.டி எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டிக்கு அருகில் நின்றிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, நெட்டிசன்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர்.

    https://x.com/RailwaySeva/status/2071643238138872056?

    இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தலையிட்ட இந்திய ரயில்வே, ரூபாலி தீட்சித்தின் புகாரை ‘ரயில் மதத்’ குறைதீர்ப்பு தளத்தில் பதிவு செய்துள்ளது. இதுகுறித்த புகார் எண் ரூபாலியின் மொபைலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

    பாதிப்புக்குள்ளான போது அமைதியாக இருக்காமல், தைரியமாக வீடியோ எடுத்துப் புகார் அளித்த அந்தப் பெண்ணிற்குச் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    harassed Man makes obscene gestures Railways train travelling
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎங்களைச் சீண்டுபவர்களுக்கு அதே வேகத்தில் பதில்சொல்வோம் – மாணிக்கம் தாகூர் அதிரடி!
    Next Article ஃபிஃபா உலகக் கோப்பை 2026: “ஜெர்மனி இனி முதல் தர அணி அல்ல” – பயிற்சியாளர் நாகல்ஸ்மேன் வேதனை
    Editor web3
    • Website

    Related Posts

    ” மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் ஊழல்” – விசிக ‘பகீர்’ குற்றச்சாட்டு

    June 30, 2026

    ஆட்சி அமைக்க திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து குறுக்கு வழியில் திட்டம் –அமைச்சர் நிர்மல்குமார் பகீர்

    June 30, 2026

    வெயிலை எதிர்கொள்ள புது ஐடியா!. ‘நீர் பீரங்கி’ ஸ்ப்ரே! வைரலாகும் ஐரோப்பிய ஸ்டைல்!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ” மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் ஊழல்” – விசிக ‘பகீர்’ குற்றச்சாட்டு

    ஆட்சி அமைக்க திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து குறுக்கு வழியில் திட்டம் –அமைச்சர் நிர்மல்குமார் பகீர்

    வெயிலை எதிர்கொள்ள புது ஐடியா!. ‘நீர் பீரங்கி’ ஸ்ப்ரே! வைரலாகும் ஐரோப்பிய ஸ்டைல்!

    குளோபல் ஸ்கில்ஸ் சேலஞ்ச் 2026: இந்தியாவுக்கு 3 தங்கம் உட்பட 5 பதக்கங்கள்!

    சந்தர்ப்பவாத எடப்பாடி பழனிசாமி; தீய சக்தியுடன் எப்படி அதிமுக கைகோர்க்க முடியும்? – அதிமுகவை விட்டு வெளியேறினார் எம்.ஆர். விஜயபாஸ்கர்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.