Close Menu
    What's Hot

    பள்ளி, கல்லூரிகளில் தவெக தலைவர் பிறந்த நாள்;  அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு

    ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸுக்கு மீண்டும் அவகாசம்

    இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடர்!. சஞ்சு சாம்சன் vs சூர்யவன்ஷி!. யாருக்கு வாய்ப்பு?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“இது தான் வைகோவின் உண்மையான முகம்…” –  திமுக காட்டம்
    Featured

    “இது தான் வைகோவின் உண்மையான முகம்…” –  திமுக காட்டம்

    Editor web2By Editor web2June 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    RS Bharathi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இன்றைய பேட்டிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

    செங்கல்பட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுக ஆட்சி கமிஷன், கட்டிங், கரப்சனுடன் நடந்ததாகவும் கூட்டணி தர்மத்துக்காக அது குறித்து அப்போது எதுவும் பேசவில்லை எனவும் கூறி இருந்தார்.

    இந்த நிலையில்,  அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வைகோவை கடுமையாக விமர்சித்தார்.

    வைகோ குறித்து பேச விரும்பவில்லை என்றாலும், “அரசியலில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் எப்படி வேடம் போட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். குதிரைப் பேரத்திற்கு விஜய் தூண்டினார் என்பதை வைகோவே ஒப்புக்கொண்டுள்ளார். வைகோவுடன் சென்றவர்கள் அரசியலில் அனாதையாக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

    மேலும், “வைகோ போன்றவர்களின் பேச்சை பெரிதுபடுத்த வேண்டாம். இன்று ஆட்சியின் தவறுகளை திசைதிருப்பும் நோக்கில்தான் இத்தகைய கருத்துகளை கூறுகிறார். வைகோவின் உண்மையான முகம் தற்போது வெளிப்பட்டுவிட்டது. அவர் அரசியலில் பலமுறை தனது வாக்குறுதிகளை மீறியவர்” என்று விமர்சித்தார்.

    vlcsnap 2026 06 30 13h42m44s345

    மதிமுக குறித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பது புறந்தள்ளப்பட வேண்டிய கட்சி. அந்தக் கட்சியை தொடங்கிய காலத்தில் இருந்த முக்கிய நிர்வாகிகள் இன்று அங்கே இல்லை” என்றார்.

    தொடர்ந்து தமிழக அரசியல் சூழல் குறித்தும் கருத்து தெரிவித்த அவர், “இந்த அரசின் தவறுகளை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். திமுக நடத்தும் போராட்டங்கள் அர்த்தமுள்ளவை; அந்தப் போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவும், வெற்றியும் கிடைக்கும்” என்றார்.

    அத்துடன், “நேரு, இந்திரா காந்தி போன்ற தலைவர்களின் காலத்தில் அரசியல் செய்தவர்கள் நாங்கள். நேற்று முளைத்த காளான்தான் மாணிக்கம் தாக்கூர்” என்றும் ஆர்.எஸ்.பாரதி  காட்டமாக கூறினார்.

    DMK RSBharathi TamilNaduPolitics Vaiko
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராணுவத் தளபதி உபேந்திர திரிவேதி பணி ஓய்வு..! புதிய தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு..!
    Next Article உலகக்கோப்பை நாக்-அவுட் த்ரில்லர்!. 88 ஆண்டுக்கால காத்திருப்பு!. பிரேசிலின் பிரம்மாண்ட கம்பேக் வெற்றி!
    Editor web2
    • Website

    Related Posts

    பள்ளி, கல்லூரிகளில் தவெக தலைவர் பிறந்த நாள்;  அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு

    June 30, 2026

    ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸுக்கு மீண்டும் அவகாசம்

    June 30, 2026

    இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடர்!. சஞ்சு சாம்சன் vs சூர்யவன்ஷி!. யாருக்கு வாய்ப்பு?

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளி, கல்லூரிகளில் தவெக தலைவர் பிறந்த நாள்;  அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு

    ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸுக்கு மீண்டும் அவகாசம்

    இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடர்!. சஞ்சு சாம்சன் vs சூர்யவன்ஷி!. யாருக்கு வாய்ப்பு?

    அரசு ஊழியர்களுக்கான ஊக்க ஊதியம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    மதிமுகவைச் சீண்டும் விசிக; தவெகவில் கூட்டணி சேர்வதில் விருப்பமில்லையா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.