Close Menu
    What's Hot

    பிரிட்டனை திணற வைத்த வெப்ப அலை… இந்தியாவுக்கான பாடம் என்ன?

    கவிஞர் புவியரசு காலமானார்… ”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்”

    ஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கவிஞர் புவியரசு காலமானார்… ”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்”
    Featured

    கவிஞர் புவியரசு காலமானார்… ”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்”

    Editor web2By Editor web2June 30, 2026Updated:June 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Puviarasu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான புவியரசு இன்று கோவையில் காலமானார். அவருக்கு வயது 96.

    கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனியில் வசித்து வந்த அவர், முதுமை காரணமாக உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

    1931-ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே லிங்கவநாயக்கன்புதூரில் பிறந்த அவரது இயற்பெயர் சு. ஜெகநாதன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணியாற்றிய அவர், 1952 முதல் இலக்கியப் பணியில் ஈடுபட்டார்.

    வானம்பாடி இலக்கிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான புவியரசு, 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியர், கலீல் ஜிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, தஸ்தயெவ்ஸ்கி, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

    வங்கக் கவிஞர் நஜ்ருல் இஸ்லாமின் “தி ரெவலூஷனரி” நூலின் தமிழாக்கமான ‘புரட்சிக்காரன்’ நூலுக்காக 2007-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார். தொடர்ந்து அவரது ‘கையொப்பம்’ கவிதைத் தொகுப்புக்காக 2009-ஆம் ஆண்டு மீண்டும் சாகித்ய அகாடமி விருது பெற்றார். ‘முக்கூடல்’ நூலுக்காக 2004-ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த புதுக்கவிதை நூலுக்கான விருதையும் பெற்றிருந்தார்.

    தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவரான புவியரசுவின் மறைவு, இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்” : மு.க.ஸ்டாலின் இரங்கல்

    முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வானம்பாடி கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் முக்கியமானவரும், முதுபெரும் கவிஞருமான புவியரசு அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.  உலகின் பெரும் கவிகள், எழுத்தாளர்களின் இறவாக் காவியங்களைத் தமிழில் ஆக்கியளித்துப் பங்காற்றியவர்.

    தம் வாழ்வே தமிழ் வாழ்வாக வாழ்ந்து மறைந்துள்ளார் கவிஞர் புவியரசு. அன்னாரை இழந்து வாடும் தமிழ் கூறும் நல்லுலகத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை
    Next Article பிரிட்டனை திணற வைத்த வெப்ப அலை… இந்தியாவுக்கான பாடம் என்ன?
    Editor web2
    • Website

    Related Posts

    பிரிட்டனை திணற வைத்த வெப்ப அலை… இந்தியாவுக்கான பாடம் என்ன?

    June 30, 2026

    ஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை

    June 30, 2026

    நாளை இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர் தாகைச்சி!. பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரிட்டனை திணற வைத்த வெப்ப அலை… இந்தியாவுக்கான பாடம் என்ன?

    கவிஞர் புவியரசு காலமானார்… ”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்”

    ஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை

    நாளை இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர் தாகைச்சி!. பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!

    போன் நம்பர் தேவையில்லை… வாட்ஸ்அப்பில் வருகிறது ‘யூசர்நேம்’ வசதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.