Close Menu
    What's Hot

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திமுக ஆட்சியில் ஏமாற்றப்பட்ட ஒப்பந்ததாரர்கள் தன்னிடம் புகார் அளிக்கலாம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு
    Featured

    திமுக ஆட்சியில் ஏமாற்றப்பட்ட ஒப்பந்ததாரர்கள் தன்னிடம் புகார் அளிக்கலாம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 aadhav
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித் துறையில் ஏமாற்றப்பட்ட ஒப்பந்ததாரர்கள் தன்னிடம் நேரிலோ, மின்னஞ்சல் வழியாகவோ புகார் அளிக்கலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

    பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

    தமிழ்நாடு அரசின் நிர்வாகம் மிக நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் மையப்படுத்தப்பட்ட ஊழல்கள், திட்டமிடப்பட்ட விதிமீறல்கள், நிர்ணயிக்கப்பட்ட லஞ்சத்தொகை எனப முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது

    பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளின் ஒப்பந்ததாரர்களை அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள், அவர்களின் குடும்ப உறவுகள், அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் எனப் பலரிடமும் ஒப்பந்தம் தருவதாக வாக்குறுதி கொடுத்து பணம் வாங்கியுள்ளனர். பலரிடம் பணத்தையும் பெற்றுக் கொண்டு முறையாக வேலைகளையும் ஒதுக்காமல், ஒப்பந்ததாரர்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.

    இது தொடர்பான பல புகார்கள் தற்போது எங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. மேலும், இதுபோல் பாதிக்கப்பட்டவர்களோ, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களோ புகார் கொடுக்க விரும்பினால், என்னிடமோ அல்லது லஞ்ச ஒழிப்பு (DVAC) காவல்துறையினரிடமோ புகார் கொடுக்கலாம். என்னிடம் நேரடியாகவோ அல்லது minister.pwd.hd.tn@gmail.com என்ற மின்னஞ்சலிலோ புகார் தெரிவிக்கலாம்.

    புகார் தெரிவிப்பவர்கள் பற்றிய விபரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், அவர்களுக்குத் தேவையான சட்ட பாதுகாப்பும் வழங்கப்படும். விரைவில் அவர்கள் இழந்த பணத்தை மீட்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில், இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாது. ஒப்பந்தங்கள் அனைத்தும் நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெறும் என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

    Aadhav Arjuna Complaint Contractors DMK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article40 வருட காத்திருப்பு!. ஈக்வடாரை சாய்த்த மெக்ஸிகோ!. அடுத்த சுற்றுக்குத் தகுதி!
    Next Article யஷ்-இன் ‘டாக்ஸிக்’ நாயகிகள் டீசர் வெளியீடு!. மிரட்டலான தோற்றத்தில் நடிகை நயன்தாரா!
    Editor TN Talks

    Related Posts

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    July 1, 2026

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    July 1, 2026

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.