Close Menu
    What's Hot

     திருப்பூர் : தேங்கிய 7 மூட்டை அரசு ஆவணங்கள், கடிதங்கள்..! டெலிவரி செய்யாத தபால்காரர் சஸ்பெண்ட்..!

    இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20கோடி பேர் பார்த்துள்ளனர்..! ஜாமின் மனு தள்ளுபடி..!

    ஜூலை 12ம் தேதி ‘We the leaders’-ன் முதல் மாநாடு..!! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பொன்முடி தொடர்ந்த  வழக்கு தள்ளுபடி – உயர்நீதிமன்றம் அதிரடி
    Featured

    பொன்முடி தொடர்ந்த  வழக்கு தள்ளுபடி – உயர்நீதிமன்றம் அதிரடி

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 ponmudi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னையில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

    இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    இந்த புகார் மனு,  எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி தரப்பில், மூடிய அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பேச்சு தொடர்பாக அளிக்கப்பட்ட தனி நபர் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது; இந்த வழக்கை தாக்கல் செய்யும் முன் அரசின் அனுமதியை பெறவில்லை என்பதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது என வாதிடப்பட்டது.

    புகார்தாரரான உமா ஆனந்தன் தரப்பில், தனது பேச்சு ஊடகங்களில் பரவும், பிற மதத்தினர் பார்ப்பார்கள் என்று தெரிந்தே பொன்முடி இந்த வெறுப்பு பேச்சை பேசியுள்ளார்; இதே விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், பொன்முடியின் பேச்சால் பொது அமைதிக்கு எந்த குந்தக்கமும் ஏற்படவில்லை என கூறி, புகார்கள் முடித்துவைக்கப்பட்டன; தற்போது பொன்முடிக்கு எதிராக வழக்குத் தொடர அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகவும், அவர் வழக்கை எதிர்கொண்டு குற்றாகச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று வாதிடப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய பொன்முடியின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

    Case Dismissed Court Order High Court Ponmudy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவீட்டில் மூட்டை மூட்டையாக லெட்டர்கள் பதுக்கல்..!! போஸ்ட்மேன் அதிரடி பணியிடை நீக்கம்..!!
    Next Article வடக்கில் யூஸ் பண்ண ‘வாஷிங் மெஷின்’ தமிழ்நாட்டுக்கும் வந்துடுச்சாமே..!! கலாய்த்த கனிமொழி..!!
    Editor TN Talks

    Related Posts

     திருப்பூர் : தேங்கிய 7 மூட்டை அரசு ஆவணங்கள், கடிதங்கள்..! டெலிவரி செய்யாத தபால்காரர் சஸ்பெண்ட்..!

    July 2, 2026

    இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20கோடி பேர் பார்த்துள்ளனர்..! ஜாமின் மனு தள்ளுபடி..!

    July 2, 2026

    ஜூலை 12ம் தேதி ‘We the leaders’-ன் முதல் மாநாடு..!! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     திருப்பூர் : தேங்கிய 7 மூட்டை அரசு ஆவணங்கள், கடிதங்கள்..! டெலிவரி செய்யாத தபால்காரர் சஸ்பெண்ட்..!

    இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20கோடி பேர் பார்த்துள்ளனர்..! ஜாமின் மனு தள்ளுபடி..!

    ஜூலை 12ம் தேதி ‘We the leaders’-ன் முதல் மாநாடு..!! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!!

    இனி தவெக தான்..! அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறும்..! சி.விஜயபாஸ்கர் பேச்சு..!

    அரசியல் அரங்கில் அதிரடி எழுச்சி..!! சரித்திரம் படைத்தார் CM விஜய்..!! எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகழாரம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.