Close Menu
    What's Hot

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    பெங்களூரு ஐடி நிறுவன கிரெச்சில் குழந்தைகள் சித்ரவதை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கைதிகள்,  வழக்கறிஞர்கள் சந்திப்புக்கு கூடுதல் நேரம் – புழல் சிறை நிர்வாகம் உறுதி
    Featured

    கைதிகள்,  வழக்கறிஞர்கள் சந்திப்புக்கு கூடுதல் நேரம் – புழல் சிறை நிர்வாகம் உறுதி

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கி தரப்படும் என  புழல் சிறை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

    சென்னைய சேர்ந்த எம்.தமிழழகன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில், சென்னை புழல் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளதாகவும், இவர்களுக்கு சட்ட ரீதியாக உதவி வழங்குவதற்கான வசதிகள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் கூறியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, புழல் சிறையில் கைதிகளை வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் சந்திப்பதற்காக 16 கேபின்கள் அமைக்கப்பட்டு, தினமும் 3 முறை தலா அரை மணிநேரம் ஒதுக்கப்பட்டு வாய்ப்பு தரப்படுவதாக கூறினார்.

    இதில் 8 கேபின்களில் தொலைபேசி மூலமாகவும், 8 கேபின்களில் நேரடியாகவும் கைதிகளுடன் பேச முடியும் என்றும், அனுமதிக்கப்பட்ட அரை மணிநேரத்தில் 5 கைதிகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதால் கைதிகளுக்கு சட்டரீதியான ஆலோசனைகளை வழங்க முடியவில்லை எனக் கூறினார்.

    தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையக்குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் அன்புமணி, புழல் சிறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் வழக்கறிஞர்கள் கைதிகளை சந்திப்பதற்கு உரிய வசதிகள் தற்போது உள்ளதாக தெரிவித்தார்.

    புழல் சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.தினேஷ், மனுதாரரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கைதிகளை சந்திப்பதற்கான ஷ்லாட்டுகளின் எண்ணிக்கையை ஆறிலிருந்து எட்டாக உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் அது அமல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.

    இந்த உத்தரவாதத்தை விரைவில் அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.

    Inmates Lawyers Meeting Hours Prison Administration Puzhal Prison
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“மாதம் ஒருமுறை மின் கட்டண வாக்குறுதி எங்கே?” – நயினார் நாகேந்திரன் கேள்வி
    Next Article போதை இல்லா பொள்ளாச்சி –  ஜூலை 12-இல் வி த லீடர்ஸின் முதல் விழிப்புணர்வு மாநாடு
    Editor TN Talks

    Related Posts

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    July 2, 2026

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    July 2, 2026

    பெங்களூரு ஐடி நிறுவன கிரெச்சில் குழந்தைகள் சித்ரவதை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    பெங்களூரு ஐடி நிறுவன கிரெச்சில் குழந்தைகள் சித்ரவதை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

    இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து – பிரதமர் மோடி அறிவிப்பு

    ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு ;  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.