பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிதாக வி த லீடர்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இந்த அமைப்புக்கு தமிழக முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 20 லட்சத்துக்கு மேல் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், போதை இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாநாடு அண்ணாமலை தலைமையில் வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த மாநாட்டுக்கான பூமி பூஜை வசந்த ராஜன் தலைமையில் நடைபெற்றது. அர்ச்சகர்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது.
பொள்ளாச்சி, கோவை ,திருப்பூர், உடுமலை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இந்த பூமி பூஜையில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் பவுண்டேஷன் உறுப்பினர்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். மருத்துவ வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருப்பார்கள் எனவும் அண்ணாமலை அவர்களின் மக்கள் பயணம் எப்படி எழுச்சி கூட்டம் கூடியதோ அதைவிட அதிகமானவர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என மாநாடு ஒருங்கிணைப்பாளர் வசந்த ராஜன் தெரிவித்தார்.
