Close Menu
    What's Hot

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»”fake narrative… build up அரசியல்… அவதூறு கழகம்” – ஸ்டாலினை விளாசும் தவெக
    Featured

    ”fake narrative… build up அரசியல்… அவதூறு கழகம்” – ஸ்டாலினை விளாசும் தவெக

    Editor web2By Editor web2July 3, 2026Updated:July 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay Stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியினர் பலர் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு தவெக ஐடி விங் தரப்பில் மிக காட்டமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தவெக ஐடி விங் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ வாய் இருக்கிறது என்பதற்காக வரம்பு மீறிப் பேசுவதில், fake narrative திமுகவை யாராலும் அடித்துக்கொள்ளவே முடியாது. அந்த வேலையை அச்சு பிறழாமல் செய்தால், திமுகவை மக்கள் நம்பிவிடுவர் என்ற நப்பாசையில் அவதூறு கழகத் தலைவராக மாறி, வெறும் வாயில் அவதூறுகளை மென்றுகொண்டே ஓர் அறிக்கை விட்டிருக்கிறார் ஸ்டாலின் சார்.

    பொறுப்பானப் பதவியில் இருந்ததோடு, தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் பொறுப்பை உணராமல் பேசியது குறித்து உயர்நீதிமன்றம் என்ன கூறியது என திமுக மற்றும் ஸ்டாலின் சாரின் செவிகளில் ஏறாமல் போனது ஏனோ? அனிதா ராதாகிருஷ்ணனா அல்லது அவதூறு கோதாகிருஷ்ணனா என்பது போன்று பேசியதை ஸ்டாலின் சார் வேண்டுமானால் மெச்சிக் கொள்ளலாம். ஏனெனில், திமுக அவதூறு கழகமாக மாறி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. இந்நிலையில், fake narrative அறிக்கை விட்டு, புனித பிம்பம் கட்டும் build up அரசியலை ஸ்டாலின் சார் செய்ய முற்பட்டுத் தோற்றிருக்கிறார்.

    எந்தத் தவறும் செய்யாத பத்திரிகையாளர்கள் முதற்கொண்டு எத்தனையோ பேர் மீது அடக்குமுறையை ஏவிக் கைது செய்து சிறையில் அடைத்த ஸ்டாலின் சார், இப்போது ஜனநாயகக் காவலர் வேஷம் போடுகிறார். கைது மாடல் அரசாகவே மாறி இருந்த கரப்ஷன் கபடதாரிகளான திமுகவினர், சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அரசு மீது கல்லெறிவது கயமைத்தனமன்றி வேறென்ன? மக்கள் தீர்ப்பை மதிக்காமல், ஆட்சி அதிகாரம் இழந்த ஆத்திரத்தில், மனசாட்சி உள்ள மக்களாட்சியான நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கத் தன் கொத்தடிமைக் கூட்டத்து முன்னாள் அமைச்சரைத் தூண்டிவிட்ட ஸ்டாலின் சார், இரண்டு நாள்களாக எங்கிருந்தார் என்று தெரியவில்லை. இப்போது வந்து, வீட்டுக்குள் இருந்து, வெற்று அறிக்கை வெளியிடுகிறார். உப்பைத் தின்றால் சப்பாத்தியா சாப்பிட முடியும்?. தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும்.

    குதிரை பேரம், ஒட்டக பேரம் முதல் அனைத்து அரசியல் மிருக பேரங்களையும் நடத்தத் தொடங்கி உள்ள திமுக, மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்பதால் இப்போது ஜனநாயக வேஷம் போட்டு, அவதூறு கச்சேரியை ஆரம்பித்துள்ளது. திருட்டு மாடல் திமுக ஆட்சியின் ஒவ்வோர் ஊழலாக வெளிவந்துவிடுமே என்ற பயத்தில் உத்தமர் வேடம் போட்டு, மக்களை மீண்டும் ஏமாற்றும் வேலையில் ஸ்டாலின் சார் ஈடுபட்டால், இதை மறந்துவிட வேண்டாம்,அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    AnitaRadhakris hnan mkstalin TamilNaduPolitics TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலாக்கப் டெத் தற்கொலையாக இருந்தாலும் அரசே முழுப் பொறுப்பு..!! அதிரடி காட்டிய டெல்லி ஐகோர்ட்..!!
    Next Article CM விஜய் தான்.. ஆனால் ஆட்சியை இயக்குவது இவர் தான்..!! தவெக கணக்கை மாற்றிய எழிலரசன்..!!
    Editor web2
    • Website

    Related Posts

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.