Close Menu
    What's Hot

    கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணி; முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆய்வு!

    2,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதையல்!. தாய்லாந்தில் கிடைத்த வரலாற்று சான்றுகள்!

    குதிரை பேர அரசியலில் தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது – வானதி சீனிவாசன் விமர்சனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»‘பாஸ் ஸ்கேம்’ மோசடி: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38.5 லட்சம் பறிக்க முயற்சி!
    Featured

    ‘பாஸ் ஸ்கேம்’ மோசடி: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38.5 லட்சம் பறிக்க முயற்சி!

    Editor web2By Editor web2July 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Kamalhassan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் கமல்ஹாசன் நடத்தி வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தை குறிவைத்து ரூ.38.5 லட்சம் மோசடி செய்ய முயன்ற சைபர் குற்றக் கும்பல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது அந்நிறுவனம் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் தர்மன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் சேயோன் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது.

    கடந்த ஜூலை 2-ஆம் தேதி, முரளி கிருஷ்ணனின் செல்போன் எண் மர்ம நபர்களால் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், புதிய மொபைல் எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மூலம் அவரை தொடர்புகொண்ட மோசடி கும்பல், நிறுவன தயாரிப்பாளர் ஒருவரின் வாட்ஸ்அப் முகப்புப் படத்தை (DP) பயன்படுத்தி, அவரைப் போலவே பேசி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

    அவசர தேவைக்காக ரூ.38 லட்சத்து 50 ஆயிரத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு உடனடியாக அனுப்புமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதற்காக “Nisarga Alternative Naturopathy and Paramedical Council” என்ற பெயரில் இயங்கும் நிறுவனத்தின் Yes Bank கணக்கு விவரங்களும் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால், குறுஞ்செய்தியின் மீது சந்தேகமடைந்த முரளி கிருஷ்ணன், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் நேரடியாக உறுதி செய்தபோது இது “Boss Scam” எனப்படும் ஆள்மாறாட்ட சைபர் மோசடி என்பது தெரியவந்தது. இதையடுத்து பணம் அனுப்பாமல் தவிர்த்த அவர், சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். வாட்ஸ்அப் உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களையும் ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார்.

    புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் பயன்படுத்தப்பட்ட மொபைல் எண், வங்கிக் கணக்கு மற்றும் அதற்கு பின்னால் உள்ள சைபர் கும்பலை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    சமீப காலமாக நிறுவனங்களின் உயர் நிர்வாகிகள் போல ஆள்மாறாட்டம் செய்து பணம் கேட்கும் “Boss Scam” மோசடிகள் அதிகரித்து வருவதால், நிறுவனங்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    BossScam CyberCrime KamalHaasan RajKamalFilms
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“கவர்ச்சி மாயையை நம்பி வாக்களித்த மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்”
    Next Article விஜய் அரசை கவிழ்க்க திமுக சதி ; நாங்கள் காவல் அரணாக இருப்போம் – வைகோ
    Editor web2
    • Website

    Related Posts

    கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணி; முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆய்வு!

    July 6, 2026

    2,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதையல்!. தாய்லாந்தில் கிடைத்த வரலாற்று சான்றுகள்!

    July 6, 2026

    குதிரை பேர அரசியலில் தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது – வானதி சீனிவாசன் விமர்சனம்

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணி; முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆய்வு!

    2,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதையல்!. தாய்லாந்தில் கிடைத்த வரலாற்று சான்றுகள்!

    குதிரை பேர அரசியலில் தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது – வானதி சீனிவாசன் விமர்சனம்

    செந்தில்பாலாஜி சகோதரரின் முன்ஜாமீன் மனு ; வேறு நீதிபதிக்கு விசாரணையை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு

    அடுத்த 10 ஆண்டுகளில் நீர் மேலாண்மைக்காக ரூ.1 லட்சம் கோடி அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.