Close Menu
    What's Hot

    அடடே இப்படியும் மனிதர்களா? – குருவிக்காக ஸ்கூட்டி தியாகம்!

    ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் தீவிரம்..!! 2 கப்பல்களுக்கு குறி.. ஈரான் ஏவுகணை அட்டாக்..!!

    கரூருக்கு முதலமைச்சர் செல்ல தடையில்லை; திமுகவின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»துரைமுருகன் வெற்றியை எதிர்த்த வழக்கு செல்லத்தக்கதல்ல; உயர்நீதிமன்றம் தீர்ப்பு
    Featured

    துரைமுருகன் வெற்றியை எதிர்த்த வழக்கு செல்லத்தக்கதல்ல; உயர்நீதிமன்றம் தீர்ப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 duraimurugan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து  சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், அதிமுக வேட்பாளர் வி.ராமுவை விட 746 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

    இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை என குற்றம்சாட்டி, துரைமுருகனின் வெற்றியை செல்லாது எனவும், தன்னை வெற்றிபெற்றவராகவும் அறிவிக்கக் கோரி அதிமுக வேட்பாளர் வி.ராமு 2021ல் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    ராமு தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று துரைமுருகன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.  துரைமுருகன் தரப்பில், 16வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்து, 17 சட்டமன்றம் அமைந்துவிட்ட நிலையில், வாக்குக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படாத நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, பதவிகாலம் முடிந்துவிட்ட நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படாத நிலையில், இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என வாதிடப்பட்டது.

    அதிமுக வேட்பாளர் ராமு தரப்பில், 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதை எதிரித்து திமுக வேட்பாளர் அப்பாவு தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் சமீபத்தில் வெளியான தீர்ப்பை சுட்டிக்காட்டி, பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதால் தேர்தல் வழக்கு செல்லக்கத்தக்கதல்ல என கூறமுடியாது என வாதிடப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.

    இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, அதிமுக வேட்பாளர் ராமு தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை ஏற்று, துரைமுருகனுக்கு எதிரான தேர்தல் வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி, தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

    Duraimurugan Duraimurugan election election case dismissed Election Petition High Court verdict
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் களத்தில் காணும் எதிர்பார்ப்பு உள்ளது; கேப்டன் கூல் தோனிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
    Next Article அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடா? – அமைச்சர் நிர்மல்குமார் பதில்
    Editor TN Talks

    Related Posts

    அடடே இப்படியும் மனிதர்களா? – குருவிக்காக ஸ்கூட்டி தியாகம்!

    July 7, 2026

    ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் தீவிரம்..!! 2 கப்பல்களுக்கு குறி.. ஈரான் ஏவுகணை அட்டாக்..!!

    July 7, 2026

    கரூருக்கு முதலமைச்சர் செல்ல தடையில்லை; திமுகவின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடடே இப்படியும் மனிதர்களா? – குருவிக்காக ஸ்கூட்டி தியாகம்!

    ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் தீவிரம்..!! 2 கப்பல்களுக்கு குறி.. ஈரான் ஏவுகணை அட்டாக்..!!

    கரூருக்கு முதலமைச்சர் செல்ல தடையில்லை; திமுகவின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

    சீனாவை புரட்டிப்போட்ட கனமழை: வெள்ளம், நிலச்சரிவுகளில் 8 பேர் உயிரிழப்பு.. பலர் மாயம்..!!

    இரட்டைமலை சீனிவாசனாரின் உயரிய இலட்சியங்களின் படி தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம்  – முதலமைச்சர் புகழ்வணக்கம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.