Close Menu
    What's Hot

    ‘காக்ரோச் ஜனதா கட்சி’ எக்ஸ் கணக்கு –  மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோருக்கு முழு ஆதரவு வழங்க பிரியங்கா காந்தி வேண்டுகோள்

    வளமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா – இந்தோனேசியா பயணம்;  இருநாடுகளின் கலாச்சார பிணைப்பை புகழ்ந்த பிரதமர் மோடி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்
    Featured

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    014 cm opantham A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு மிக உயர்ந்த ஏற்றுமதி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது, தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பாகவும்,அமோனியா கசிவு தொடர்பான அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இந்த நிலையில், தொழிற்துறையில் தமிழ்நாடு முன்னேறி வருவதாக அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    தொழிற்சாலைத் தளங்களிலிருந்து உலக நாடுகள் வரை, தமிழ்நாடு ஒரு குறிக்கோளுடன் தொடர்ந்து முன்னேறி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2025-26 நிதியாண்டில், இந்தியாவின் முதல் 10 ஏற்றுமதி மாநிலங்களில் தமிழ்நாடு மிக உயர்ந்த ஏற்றுமதி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், இதன் ஏற்றுமதி 13.7% அதிகரித்து, 52.17 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவின் ஏற்றுமதியில் மாநிலத்தின் பங்கு 11.9%-லிருந்து 13.4%-ஆக அதிகரித்துள்ளது. இது, நாட்டின் உலகளாவிய வர்த்தக இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதில் தமிழ்நாட்டின் விரிவடைந்து வரும் பங்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

    தொழிற்துறைச் சிறப்பு, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, திறமையான பணியாளர்கள் மற்றும் மீள்திறன் கொண்ட வணிகச் சூழல் ஆகியவற்றால் உந்தப்பட்டு, தமிழ்நாடு வெறும் பொருட்களை மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை; அது உலகிற்கு நம்பிக்கை, திறன் மற்றும் போட்டித்திறனை ஏற்றுமதி செய்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    014 cm opantham

    இன்று 1000 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் போரூரில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்  முதலமைச்சர்  ச. ஜோசப் விஜய்  முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

    export growth exports 59.31 billion USD Tamil Nadu economy Tamil Nadu exports
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!
    Next Article திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து… போக்குவரத்துத் துறை அதிரடி!
    Editor TN Talks

    Related Posts

    ‘காக்ரோச் ஜனதா கட்சி’ எக்ஸ் கணக்கு –  மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 7, 2026

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோருக்கு முழு ஆதரவு வழங்க பிரியங்கா காந்தி வேண்டுகோள்

    July 7, 2026

    வளமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா – இந்தோனேசியா பயணம்;  இருநாடுகளின் கலாச்சார பிணைப்பை புகழ்ந்த பிரதமர் மோடி

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘காக்ரோச் ஜனதா கட்சி’ எக்ஸ் கணக்கு –  மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோருக்கு முழு ஆதரவு வழங்க பிரியங்கா காந்தி வேண்டுகோள்

    வளமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா – இந்தோனேசியா பயணம்;  இருநாடுகளின் கலாச்சார பிணைப்பை புகழ்ந்த பிரதமர் மோடி

    திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து… போக்குவரத்துத் துறை அதிரடி!

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.