Close Menu
    What's Hot

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    குதிரைப் பேர வழக்கு: 3 பேருக்கும் போலீஸ் காவலா? நாளை முடிவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!
    Featured

    ”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!

    Editor web2By Editor web2July 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Temple Dance
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவிலின் உள் பிரகாரத்தில் பெண் நாட்டியக் கலைஞர் ஒருவர் நடனமாடி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பக்தர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக போற்றப்படும் அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள், புதுமணத் தம்பதிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கோவிலுக்கு வந்து வழிபடுவதோடு, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தும் தற்போது அமெரிக்காவில் நாட்டியப் பயிற்சியாளராக செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் பெண் ஒருவர், சில நாட்களுக்கு முன்பு ஏகாம்பரநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், உள் பிரகாரத்தில், ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் இடம்பெற்ற ”அழகு மயில் ஆட… அபினயங்கள் கூட…”  என்ற பாடல் படமாக்கப்பட்ட இடத்தில் அதே பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவு செய்துள்ளார்.

    அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து, அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, கோவிலின் புனிதத் தன்மையை பாதிக்கும் வகையில் இதுபோன்ற செயல்கள் நடைபெறக்கூடாது என்றும், வழிபாட்டு தலங்களில் வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பதற்கு உரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் பல பக்தர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக கோவில் நிர்வாகம் அல்லது இந்து சமய அறநிலையத் துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் வெளியிடவில்லை.

    EkambaranatharTemple InstagramReel Kanchipuram TempleEtiquette
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாருயிபூர் சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு: மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி
    Next Article தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்
    Editor web2
    • Website

    Related Posts

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    July 7, 2026

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    July 7, 2026

    குதிரைப் பேர வழக்கு: 3 பேருக்கும் போலீஸ் காவலா? நாளை முடிவு

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    குதிரைப் பேர வழக்கு: 3 பேருக்கும் போலீஸ் காவலா? நாளை முடிவு

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    ”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.