Close Menu
    What's Hot

    ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள்: சுங்க வரி முழுமையாக ரத்து

    தொடரை இழந்த இந்தியா! ஆறுதல் வெற்றியுடன் கௌரவத்தை மீட்குமா?. இன்று கடைசி டி20 போட்டி!

    ஸ்மிருதி மந்தனாவின் இரட்டை சாதனை!. லார்ட்ஸ் டெஸ்டில் அரைசதம் விளாசி முத்திரை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆம்புலன்ஸை திருடி லாரி மீது மோதி விபத்து!. போதை ஆசாமியால் பரபரப்பு!
    Featured

    ஆம்புலன்ஸை திருடி லாரி மீது மோதி விபத்து!. போதை ஆசாமியால் பரபரப்பு!

    Editor web3By Editor web3July 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tirupur Drunken man
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை, போதை ஆசாமி ஒருவர் கள்ளச்சாவி மூலம் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த சக்திவேல் (38) என்பவர், யாரும் கவனிக்காத நேரத்தில் ஆம்புலன்ஸைத் திருடி அதிவேகமாக எடுத்துச் சென்றார். தாராபுரம்-ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த அந்த ஆம்புலன்ஸ், முன்னால் சென்ற லாரி ஒன்றின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

    விபத்தை ஏற்படுத்திய கையோடு அங்கிருந்து தப்பிக்க முயன்ற சக்திவேலை, லாரி ஓட்டுநர் அங்கமுத்து மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து சினிமா பாணியில் விரட்டிப் பிடித்தனர். பிடிபட்டவரை அங்கேயே லாரி முன்பாக அமர வைத்த பொதுமக்கள், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போதையில் இருந்த சக்திவேலை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் முன்னரும் ஆம்புலன்ஸ் திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. ஆம்புலன்ஸ் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சக்திவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்தச் சம்பவம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. எனவே, மருத்துவமனை வளாகங்களில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என ஓட்டுநர்கள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

    accident Ambulance theft ambule - lorry Drunken man tirupur
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசொந்த தொகுதிக்கு செல்லும் முதல்வர் விஜய்!. பெரம்பூரை நவீனமயமாக்க ரூ.48 லட்சத்தில் மெகா பிளான்!
    Next Article முதல்வர் விஜய்யின் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோயில் நிலம்; இதுவும் லஞ்சம்தான்!. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள்: சுங்க வரி முழுமையாக ரத்து

    July 11, 2026

    தொடரை இழந்த இந்தியா! ஆறுதல் வெற்றியுடன் கௌரவத்தை மீட்குமா?. இன்று கடைசி டி20 போட்டி!

    July 11, 2026

    ஸ்மிருதி மந்தனாவின் இரட்டை சாதனை!. லார்ட்ஸ் டெஸ்டில் அரைசதம் விளாசி முத்திரை!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள்: சுங்க வரி முழுமையாக ரத்து

    தொடரை இழந்த இந்தியா! ஆறுதல் வெற்றியுடன் கௌரவத்தை மீட்குமா?. இன்று கடைசி டி20 போட்டி!

    ஸ்மிருதி மந்தனாவின் இரட்டை சாதனை!. லார்ட்ஸ் டெஸ்டில் அரைசதம் விளாசி முத்திரை!

    வன்கொடுமை தடுப்பு உயர்மட்ட குழு!. முதல்வர் விஜய் தலைமையிலான குழுவில் திருமா-வுக்கு இடம்!

    “டாஸ்மாக் ஊழல் Don, நரித்தந்திர நாயகர்…”- செந்தில் பாலாஜி மீது தவெக கடும் தாக்கு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.