Close Menu
    What's Hot

    தமிழகத்தில்  கொரோனா பரவலா?  தமிழக அரசு விளக்கம்!

    நடிகர் சங்க கட்டிடம்…நிஜமாகும் கனவு இல்லம்… நடிகர் விஷால் நெகிழ்ச்சி!

    லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருண் திடீர் மாற்றம்: பின்னணி என்ன?!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»லார்ட்ஸில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி… முதல் டெஸ்டிலேயே இங்கிலாந்தை வீழ்த்தியது!
    விளையாட்டு

    லார்ட்ஸில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி… முதல் டெஸ்டிலேயே இங்கிலாந்தை வீழ்த்தியது!

    Editor web2By Editor web2July 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Indian Cricket win
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிரிக்கெட்டின் மெக்கா என போற்றப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டியில், இந்திய மகளிர் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

    இங்கிலாந்தை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, லார்ட்ஸில் டெஸ்ட் வென்ற முதல் மகளிர் அணியாக இந்தியா முத்திரை பதித்தது.

    முதலில் பேட் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 285 ரன்கள் குவித்தது. இதில் ஸ்மிருதி மந்தனா 83, ஹர்மன்பிரீத் கவுர் 58, தீப்தி சர்மா 57 ரன்கள் எடுத்தனர்.

    பின்னர் களமிறங்கிய இங்கிலாந்தை, இந்திய வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கவுட் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை 37 ரன்களுக்கு வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து 170 ரன்களுக்கு சுருண்டது.

    115 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 341/7 ரன்களில் டிக்ளேர் செய்தது. இதில் யாஸ்திகா பாட்டியா 113 ரன்கள் குவித்து, லார்ட்ஸ் மகளிர் டெஸ்ட் வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். மேலும், ஸ்மிருதி மந்தனா 70, ரிச்சா கோஷ் 50 ரன்கள் சேர்த்தனர்.

    457 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்நே ராணா 4 விக்கெட்டுகளையும், கிராந்தி கவுட், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்தில் இந்திய மகளிர் அணி இதுவரை விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 3 வெற்றி, 7 டிரா என்ற தோல்வியறியா சாதனையைத் தொடர்கிறது. மேலும், கடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் 4-வது வெற்றி இதுவாகும்.

    INDvENG Lords TeamIndia WomensCricket
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த மகளிர் வீராங்கனை விருது –  ஸ்ரீ சரணி உட்பட 3 பேர் பரிந்துரை
    Next Article 73,000 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்: திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
    Editor web2
    • Website

    Related Posts

    தமிழகத்தில்  கொரோனா பரவலா?  தமிழக அரசு விளக்கம்!

    July 13, 2026

    லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருண் திடீர் மாற்றம்: பின்னணி என்ன?!

    July 13, 2026

    ”RSS அரசியலின் தமிழாக்கம்தான் அண்ணாமலை; அது மிகவும் ஆபத்தானது”

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில்  கொரோனா பரவலா?  தமிழக அரசு விளக்கம்!

    நடிகர் சங்க கட்டிடம்…நிஜமாகும் கனவு இல்லம்… நடிகர் விஷால் நெகிழ்ச்சி!

    லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருண் திடீர் மாற்றம்: பின்னணி என்ன?!

    ”RSS அரசியலின் தமிழாக்கம்தான் அண்ணாமலை; அது மிகவும் ஆபத்தானது”

    73,000 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்: திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.