Close Menu
    What's Hot

    தமிழகத்தில் “குதிரை பேர” அரசியல் அதிகரிப்பு!. உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டி!. CPI வீரபாண்டியன் அறிவிப்பு!

    லண்டனில் பேரனின் பட்டமளிப்பு விழா!. இன்பநிதியை நெகிழ்ச்சியுடன் கட்டித் தழுவி வாழ்த்திய மு.க.ஸ்டாலின்!

    சென்னையில் புதிய வீடு வாங்கிய ஸ்ருதி ஹாசன்!. எளிமையாக நடைபெற்ற கிரகப்பிரவேச விழா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ரூ.100 கோடி தனியார் பள்ளி மோசடி வழக்கு: திமுக நிர்வாகி அரசகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
    Featured

    ரூ.100 கோடி தனியார் பள்ளி மோசடி வழக்கு: திமுக நிர்வாகி அரசகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

    Editor web1By Editor web1July 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிடம் அரசு அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில் கைதாகி உள்ள திமுக செய்தித்தொடர்பு குழு துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் மீது சென்னை காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத போலி அமைப்பு ஒன்றை அரசகுமார் நடத்தி வந்துள்ளதாக தெரிகிறது. தமக்கு அரசியல் மற்றும் அரசு உயரதிகாரிகளிடம் செல்வாக்கு இருப்பதாகக் கூறி, தனியார் பள்ளிகளுக்குத் தேவையான நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல், DTCP மற்றும் CMDA கட்டட அனுமதிகள் உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகப் பல பள்ளிகளிடம் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனை நம்பி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகங்கள் அரசகுமாரிடம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், சொன்னபடி எந்த அனுமதியையும் பெற்றுத் தராமலும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமலும் இழுத்தடித்து ஏமாற்றியுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் அளித்த புகாரின் பேரில், சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு கடந்த ஜூன் மாதம் அரசகுமாரைக் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பணம் கொடுத்து ஏமாந்த மற்ற பள்ளிகளும் தைரியமாக முன்வந்து புகாரளிக்கலாம் என காவல்துறை அறிவித்திருந்தது. அதன்படி, இதுவரை 59 தனியார் பள்ளிகள் அரசகுமாருக்கு எதிராகச் சென்னை மத்திய குற்றப்பிரிவில் அதிகாரப்பூர்வமாகப் புகாரளித்துள்ளன. இதன் மூலம் ஒட்டுமொத்த மோசடித் தொகை ரூ.100 கோடியைத் தாண்டும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து இந்த வழக்கில் பல மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாலும், மோசடியின் வீரியம் அதிகமாக இருப்பதாலும், சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், சிறையில் இருக்கும் திமுக நிர்வாகி அரசகுமார் மீது தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அவர் அவ்வளவு எளிதில் ஜாமினில் வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: தனது பிறந்தநாளில் விருதைப் பெற்றார்!
    Next Article உலகக்கோப்பை கால்பந்து இன்று முதல் அரையிறுதி: ஐரோப்பிய ஜாம்பவான்கள் பிரான்ஸ் – ஸ்பெயின் மோதல்!
    Editor web1
    • Website

    Related Posts

    தமிழகத்தில் “குதிரை பேர” அரசியல் அதிகரிப்பு!. உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டி!. CPI வீரபாண்டியன் அறிவிப்பு!

    July 14, 2026

    லண்டனில் பேரனின் பட்டமளிப்பு விழா!. இன்பநிதியை நெகிழ்ச்சியுடன் கட்டித் தழுவி வாழ்த்திய மு.க.ஸ்டாலின்!

    July 14, 2026

    சென்னையில் புதிய வீடு வாங்கிய ஸ்ருதி ஹாசன்!. எளிமையாக நடைபெற்ற கிரகப்பிரவேச விழா!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் “குதிரை பேர” அரசியல் அதிகரிப்பு!. உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டி!. CPI வீரபாண்டியன் அறிவிப்பு!

    லண்டனில் பேரனின் பட்டமளிப்பு விழா!. இன்பநிதியை நெகிழ்ச்சியுடன் கட்டித் தழுவி வாழ்த்திய மு.க.ஸ்டாலின்!

    சென்னையில் புதிய வீடு வாங்கிய ஸ்ருதி ஹாசன்!. எளிமையாக நடைபெற்ற கிரகப்பிரவேச விழா!

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலையில் ராட்சத பாய்லர் வெடித்து பயங்கர விபத்து!. ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்!

    ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்!. இந்தியர் பலி; 8 பேர் காயம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.