Close Menu
    What's Hot

    பிறந்து ஒரு மணிநேரமே ஆன ஆண் குழந்தை!. புதரில் வீசி சென்ற அவலம்!. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

    இன்று ரமேஷுக்கு தர்ம அடி; நாளை தவெக நிர்வாகிகளுக்கு – தமிழக வெற்றிக் கழகமல்ல, பாலியல் வெறிக் கழகம் – திமுக கடும் தாக்கு!

    ‘நலம் TN’ சேவை, மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமனம், புதிய திட்டங்கள் தொடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழகத்தில் “குதிரை பேர” அரசியல் அதிகரிப்பு!. உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டி!. CPI வீரபாண்டியன் அறிவிப்பு!
    Featured

    தமிழகத்தில் “குதிரை பேர” அரசியல் அதிகரிப்பு!. உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டி!. CPI வீரபாண்டியன் அறிவிப்பு!

    Editor web3By Editor web3July 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CPI
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் எம். வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தனது கட்சியின் பலத்தை சோதித்துப் பார்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    தனியார் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த வீரபாண்டியன்,  மேலும், தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் “குதிரை பேர” அரசியல் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்றும் குறிப்பிட்ட அவர், இத்தகைய அநீதியான நடைமுறைகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    எம்.எல்.ஏ.க்களை வாங்கி விற்கும் குதிரை பேரம் நம் கண்முன்னே நடக்கிறது. இந்தியாவின் வட மாநிலங்களில் நடந்தது போல, அது இப்போது தமிழ்நாட்டுக்கும் மெதுவாக பரவி வருகிறது. இதை உடனே தடுக்கவில்லை என்றால், மாநிலத்திற்கு நல்லதல்ல. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அரசியல் நலனுக்காகவும், ஆட்சியில் நீடிப்பதற்காகவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

    மக்கள் ஒரு கட்சிக்கு வாக்களிப்பது அதன் கொள்கையை நம்பித்தான். தேர்தலுக்கு முன் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறினால் அது மக்களின் தீர்ப்புக்கு துரோகம். இது ஜனநாயகத்துக்கும் அரசியல் ஒழுக்கத்துக்கும் பெரிய நெருக்கடி. ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ யார் செய்தாலும், இடதுசாரிகள் இந்த குதிரை பேரத்தை எதிர்ப்பார்கள் என்றார்.

    மேலும், எதிர்வரும் இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து, தேர்தல் நெருங்கும் காலக்கட்டத்தில் நிலவும் சூழலைப் பொறுத்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    alone CPI CPITamilNadu Horse Trading local body elections tamilnadu Veerapandian
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலண்டனில் பேரனின் பட்டமளிப்பு விழா!. இன்பநிதியை நெகிழ்ச்சியுடன் கட்டித் தழுவி வாழ்த்திய மு.க.ஸ்டாலின்!
    Next Article வியட்நாம் படகு விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் மும்பை வந்தடைந்தன!
    Editor web3
    • Website

    Related Posts

    பிறந்து ஒரு மணிநேரமே ஆன ஆண் குழந்தை!. புதரில் வீசி சென்ற அவலம்!. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

    July 14, 2026

    இன்று ரமேஷுக்கு தர்ம அடி; நாளை தவெக நிர்வாகிகளுக்கு – தமிழக வெற்றிக் கழகமல்ல, பாலியல் வெறிக் கழகம் – திமுக கடும் தாக்கு!

    July 14, 2026

    ‘நலம் TN’ சேவை, மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமனம், புதிய திட்டங்கள் தொடக்கம்!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிறந்து ஒரு மணிநேரமே ஆன ஆண் குழந்தை!. புதரில் வீசி சென்ற அவலம்!. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

    இன்று ரமேஷுக்கு தர்ம அடி; நாளை தவெக நிர்வாகிகளுக்கு – தமிழக வெற்றிக் கழகமல்ல, பாலியல் வெறிக் கழகம் – திமுக கடும் தாக்கு!

    ‘நலம் TN’ சேவை, மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமனம், புதிய திட்டங்கள் தொடக்கம்!

    கரூர் : பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்த தவெக நிர்வாகி..! பெண் அளித்த புகாரால் பரபரப்பு..!

    தவெக ஆட்சியிலும் லாக் அப் மரணம்? – நாகர்கோவிலில் பரபரப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.