Close Menu
    What's Hot

    12 புதிய மணல் குவாரிகளை திறக்க அன்புமணி  எதிர்ப்பு!

    முதலமைச்சரை கீழே அமுக்கப் பார்த்தார்கள் – ஆதவ் அர்ஜுனா  பகீர் தகவல்!

    அமெரிக்காவில் பரவும் ஒட்டுண்ணித் தொற்று..! 31 மாநிலங்கள் பாதிப்பு என தகவல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெக ஆட்சியிலும் லாக் அப் மரணம்? – நாகர்கோவிலில் பரபரப்பு
    Featured

    தவெக ஆட்சியிலும் லாக் அப் மரணம்? – நாகர்கோவிலில் பரபரப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 nagarcoil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்தவரின் மர்ம மரணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தென்தாமரைக்குளம் அருகே  உள்ள ஈத்தங்காடு நாராயணன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத் திறனாளியான பாஜக நிர்வாகி சபரிவர்மன் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார்.

    இவருக்கு ஆனந்தவல்லி (24) என்ற மனைவியும், வினு வர்மன் (4) என்ற மகனும் உள்ளனர். கடந்த 9 ம்தேதி பிற்பகலில் தென்தாமரைக்குளம் எஸ்ஐ பிரைட் பிளஸ்சிங் தலைமையில் போலீசார் சபரிவர்மன் கடையில் சோதனை நடத்தியபோது குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சபரிவர்மனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

    கடந்த 10ம்தேதி, சிறையில் இருந்த சபரிவர்மனை, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சென்று பார்த்துள்ளனர்.

    இந்தநிலையில் ஜூன் 13ஆம் தேதி அதிகாலையில், சிறையில் சபரிவர்மன் மயக்க நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை சிறை காவலர்கள், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு பரிசோதனையில் சபரிவர்மன் இறந்தது தெரிய வந்தது. உடனடியாக உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தகவல் சபரிவர்மனின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் போலீசாரும் குவிக்கப்பட்டனர். அப்போது சபரிவர்மன் சாவில் மர்மம் உள்ளதாகக் குற்றம்சாட்டிய உறவினர்கள், அவரது உடலை அவசரமாக பிணவறைக்குள் கொண்டு சென்றது ஏன்? உடலை ஏன் காட்டவில்லை எனக் கூறி, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி தவெக ஆட்சியிலும் லாக் அப் டெத் நடப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், சபரிவர்மன் மரணத்தின் உண்மைக் காரணம் என்னவென்பதை எவ்வித சமரசமுமின்றி கண்டறிய வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.

    002 nagarcoil A

    போலீசார் தரப்பில் திடீர் உடல்நலக் குறையால் சபரிவர்மன் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், போலீசார் கைது செய்து அழைத்து வந்தபோது சபரிவர்மன் தென்தாமரைக் குளம் காவல்நிலையத்தில் முழு ஆரோக்கியத்துடன் இருந்ததாகக் கூறி அவர் அமர்ந்திருந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    உடல்நலனுடன் இருந்த நபர் எப்படி சிறையில் அடைக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் உடல்நலக் குறைவின்றி உயிரிழந்தார் என அரசை நோக்கி கேள்வி எழுந்துள்ளது.

    Kanyakumari district lock-up death Nagercoil Police Custody TVK Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநிர்மா சோப்பு பவுடர் கலந்து 2.3 கோடி லிட்டர் செயற்கை பால் விற்பனை!. அதிர்ச்சியூட்டும் மோசடி அம்பலம்!
    Next Article கரூர் : பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்த தவெக நிர்வாகி..! பெண் அளித்த புகாரால் பரபரப்பு..!
    Editor TN Talks

    Related Posts

    12 புதிய மணல் குவாரிகளை திறக்க அன்புமணி  எதிர்ப்பு!

    July 14, 2026

    முதலமைச்சரை கீழே அமுக்கப் பார்த்தார்கள் – ஆதவ் அர்ஜுனா  பகீர் தகவல்!

    July 14, 2026

    அமெரிக்காவில் பரவும் ஒட்டுண்ணித் தொற்று..! 31 மாநிலங்கள் பாதிப்பு என தகவல்..!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    12 புதிய மணல் குவாரிகளை திறக்க அன்புமணி  எதிர்ப்பு!

    முதலமைச்சரை கீழே அமுக்கப் பார்த்தார்கள் – ஆதவ் அர்ஜுனா  பகீர் தகவல்!

    அமெரிக்காவில் பரவும் ஒட்டுண்ணித் தொற்று..! 31 மாநிலங்கள் பாதிப்பு என தகவல்..!

    சாலை விபத்துகளை குறைக்க தனி செயல்திட்டம் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவு

    விஸ்வரூபம் எடுக்கும் ஆட்சிக் கவிழ்ப்பு சதி விவகாரம்..!! மேலும் 3 பேர் அதிரடி கைது..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.