Close Menu
    What's Hot

    பெரம்பூரில் நவீன வசதிகள்: முதல்வர் விஜய் ரூ.3 கோடி ஒதுக்கீடு

    9, 10ம் வகுப்புகளில் பாஸ் ஆகணுமா..?? இது கட்டாயம்.. CBSE வெளியிட்ட புதிய அப்டேட்..!!

    தொழிலாளர் கொள்கையை அரசு உடனே வெளியிட வேண்டும் – CITU வலியுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!
    Featured

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 selam death
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மாமியார் வீட்டில் இரண்டு குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த தந்தை தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டூர் அடுத்த  ஆண்டி கரையைச் சேர்ந்தவர்  கட்டிடத் தொழிலாளி வல்லரசு (வயது 26).  இவரது மனைவி ஸ்ரீபிரியா (22) கரும்புச்சாறு விற்பனை கடை நடத்தி வருகிறார்.

    இவர்களுக்கு மைவிழி (4 .5) தர்ஷன் (1.5) ஆகிய  இரண்டு குழந்தைகள் இருந்தனர்.  ஸ்ரீபிரியாவுக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி குடும்ப  தகராறு ஏற்பட்டதால் ஸ்ரீபிரியா மேட்டூர் ராஜகணபதி நகரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார்.

    இதனால் மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல நேற்று வல்லரசு, தனது மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார். இரவு வல்லரசு, தனது இரு குழந்தைகளுடன் தனி அறையில் தூங்க சென்றார்.

    இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர்களின் அறைக் கதவு திறக்கப்படாததால் மனைவி ஸ்ரீபிரியா, மாமியார் வெண்ணிலா ஆகியோர் கதவை பலமாக தட்டிப் பார்த்தனர். அப்போதும் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துப் பார்த்தனர்.

    அங்கே இரண்டு குழந்தைகளும் துப்பட்டாவில் வீட்டின் இரும்பு சட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். கட்டிடத் தொழிலாளி வல்லரசுவும் தனது மனைவியின் சேலையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

    இதனால், வல்லரசு தனது குழந்தைகளை கொலை செய்து தூக்கிட்டு பின்னர் தான் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மூன்று சடலங்களையும் மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாமியார் வீட்டில் மருமகன் குழந்தைகளை கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    சம்பவம் தொடர்பாக மேட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    children killed double murder family tragedy Father suicide Mettur Salem district
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் வழக்கு: களமிறங்கியது அமலாக்கத்துறை!
    Next Article கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!
    Editor TN Talks

    Related Posts

    பெரம்பூரில் நவீன வசதிகள்: முதல்வர் விஜய் ரூ.3 கோடி ஒதுக்கீடு

    July 14, 2026

    9, 10ம் வகுப்புகளில் பாஸ் ஆகணுமா..?? இது கட்டாயம்.. CBSE வெளியிட்ட புதிய அப்டேட்..!!

    July 14, 2026

    தொழிலாளர் கொள்கையை அரசு உடனே வெளியிட வேண்டும் – CITU வலியுறுத்தல்

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெரம்பூரில் நவீன வசதிகள்: முதல்வர் விஜய் ரூ.3 கோடி ஒதுக்கீடு

    9, 10ம் வகுப்புகளில் பாஸ் ஆகணுமா..?? இது கட்டாயம்.. CBSE வெளியிட்ட புதிய அப்டேட்..!!

    தொழிலாளர் கொள்கையை அரசு உடனே வெளியிட வேண்டும் – CITU வலியுறுத்தல்

    12 புதிய மணல் குவாரிகளை திறக்க அன்புமணி  எதிர்ப்பு!

    முதலமைச்சரை கீழே அமுக்கப் பார்த்தார்கள் – ஆதவ் அர்ஜுனா  பகீர் தகவல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.