Close Menu
    What's Hot

    பால் கொள்முதல் விலை அதிகரிப்பா? –  விரைவில் முதலமைச்சர் முடிவு

    வழக்கில் பெயர் இல்லை… ஆஜராக சொல்வது ஏன்? போலீஸுக்கு செந்தில் பாலாஜி கடிதம்..!!

    டெல்லி: நீட் முறைகேடுகளுக்கு எதிராக உண்ணாவிரதம்.. சோனம் வாங்சுக்கின் உடல்நிலை கவலைக்கிடம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திமுகவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி இன்னும் நீடிக்கிறது: அமைச்சர் நிர்மல் குமார்
    Featured

    திமுகவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி இன்னும் நீடிக்கிறது: அமைச்சர் நிர்மல் குமார்

    Editor web2By Editor web2July 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Nirmal Kumar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் தவெக அரசை கவிழ்க்கும் நோக்கில் திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், தவெக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

     சிவகாசியில் பேசிய அதிமுக. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ”முதலமைச்சர் பதவியில் உள்ள விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்ணிய குறைவாக பேசக்கூடாது. மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ? அப்போது தமிழகத்தில் தவெக ஆட்சி இருக்காது” என தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், சென்னை மின்வாரிய அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த  அமைச்சர் நிர்மல் குமார்,  கே.டி. ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு பதிலளித்தார்.

    அவர் கூறுகையில், “தமிழகத்தில் திமுக–அதிமுக கூட்டணிக்கு அனிதா ராதாகிருஷ்ணனும், ராஜேந்திர பாலாஜியும் ஒருங்கிணைப்பாளர்களாக இருப்பார்கள். அதிமுகவினர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி இன்னும் பொதுச் செயலாளராக இருக்கிறாரா என்பதையே அவர்கள் மறந்துவிட்டனர்” என்றார்.

    மேலும், “தற்போது வரை தவெக அரசை கவிழ்க்கும் முயற்சியில்தான் திமுக ஈடுபட்டு வருகிறது. தவெக எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து வாங்க திமுக மற்றும் அதிமுகவினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்” என குற்றம்சாட்டினார்.

    “பணம் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை வாங்குவது தான் உண்மையான குதிரைப் பேரம். குதிரைப் பேர அரசியலில் ஈடுபட்டது தவெக அல்ல; திமுக தான். குதிரைப் பேரம் தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  

    MLAPoaching Nirmalkumar TamilNaduPolitics TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபடிப்புக்கும் லாட்டரி மாஃபியாக்கும் என்னதான் சம்மந்தம்? – ஆதவ்வை பொளக்கும் மாரிதாஸ்
    Next Article அமெரிக்காவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்..!! வளைகுடா நாடுகள் மீது டிரம்பின் புதிய அழுத்தம்..!!
    Editor web2
    • Website

    Related Posts

    பால் கொள்முதல் விலை அதிகரிப்பா? –  விரைவில் முதலமைச்சர் முடிவு

    July 14, 2026

    வழக்கில் பெயர் இல்லை… ஆஜராக சொல்வது ஏன்? போலீஸுக்கு செந்தில் பாலாஜி கடிதம்..!!

    July 14, 2026

    டெல்லி: நீட் முறைகேடுகளுக்கு எதிராக உண்ணாவிரதம்.. சோனம் வாங்சுக்கின் உடல்நிலை கவலைக்கிடம்..!!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பால் கொள்முதல் விலை அதிகரிப்பா? –  விரைவில் முதலமைச்சர் முடிவு

    வழக்கில் பெயர் இல்லை… ஆஜராக சொல்வது ஏன்? போலீஸுக்கு செந்தில் பாலாஜி கடிதம்..!!

    டெல்லி: நீட் முறைகேடுகளுக்கு எதிராக உண்ணாவிரதம்.. சோனம் வாங்சுக்கின் உடல்நிலை கவலைக்கிடம்..!!

    டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதில் தவெக அரசுக்கு தயக்கம் ஏன்? – சீமான் கேள்வி

    ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: முக அங்கீகாரம் உள்ளிட்ட டிஜிட்டல் புரட்சி விரைவில்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.