அமெரிக்காவில் ஒரே செலபஸ் எனக் கூறியுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து, படிப்புக்கும் லாட்டரி மாஃபியாவுக்கும் என்னதான் சம்பந்தம் என யூடியூபர் மாரிதாஸ் விமர்சித்துள்ளார்.
சென்னை எழும்பூர் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமெரிக்காவில் ஒரே பாடத்திட்டம்தான் எனவும், இந்தியாவைப் பொறுத்தவரை கல்வியில் ஏற்றத்தாழ்வு இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் யூடியூபர் மாரிதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், அமைச்சரின் பேச்சு பொய் எனக் குறிப்பிட்டு, அமெரிக்காவின் 50 மாநிலமும் தனி தனி வகையில் செயல்படும். ஒற்றை கல்விக்கான அமைப்பு கூட கிடையாது. ஏன் என்றால் எல்லாம் வெவ்வேறு காலத்தில் பல ஆண்டுகள் இடைவெளியில் ஒரு நாடாக மாறியவை எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அனைத்து மாநிலத்திலும் எல்லாவிதமான கல்வி முறைகளும் அங்கீகரிக்கப்படுவதாகவும் IB , Montessori, Cambridge என அனைத்தும் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கட்டமைப்பு மிக சிக்கலான சுமார் 240 வருட சட்டவகைகளும் உண்டு எனவும், சில முற்றிலும் வித்தியாசமான கல்வி முறைகளுக்குக் கூட அனுமதி இருப்பதாகவும் தெரிவித்து, ஆகவே அமெரிக்காவில் ஒரு syllabus என்பது ஆதவ் அர்ஜுனா சொல்லும் 1001 வது பொய் எனச் சாடியுள்ளார்.
அப்படி எந்த காலத்திலும் அமெரிக்க இருந்தது இல்லை. இப்போதும் இல்லை. ஆனால் ஒன்று…. தனக்கு தோன்றுவதை எல்லாம் உண்மை போல அடித்துவிடுவது என்ற ஒரு கீழ்த்தரமான குணம் ஆதவ் அர்ஜுனாவிடம் உள்ளதாகக் குறிப்பிட்டு, படிப்புக்கும் லாட்டரி மாஃபியாக்கும் என்னதான் சம்மந்தம் என விமர்சித்துள்ளார்.
