Close Menu
    What's Hot

    ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: முக அங்கீகாரம் உள்ளிட்ட டிஜிட்டல் புரட்சி விரைவில்!

    சாமானியருக்கு ஒரு சட்டம்; தவெக நிர்வாகிக்கு ஒரு சட்டமா? – உதயநிதி சாடல்!

     சாத்தங்குடி காதலர்கள் உயிரிழந்த விவகாரம்! நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைப்பினரால் தள்ளுமுள்ளு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஐ.நா. முழு உறுப்பினர் அந்தஸ்து; புதிய திட்டங்கள் தொடங்கப்படும்-  பாலஸ்தீனத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டும் இந்தியா!
    Featured

    ஐ.நா. முழு உறுப்பினர் அந்தஸ்து; புதிய திட்டங்கள் தொடங்கப்படும்-  பாலஸ்தீனத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டும் இந்தியா!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    013 un
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாலஸ்தீனத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் (UN) முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற தனது நீண்டகால நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

    மேலும், இஸ்ரேல்–பாலஸ்தீன் பிரச்சினைக்கு அவ்விரு நாடுகளின் பேச்சுவார்த்தை மட்டுமே நிலையான தீர்வை அளிக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் திங்கள்கிழமை நடைபெற்ற பாலஸ்தீன நன்கொடையாளர் குழுவின் (Palestine Donor Group) அமைச்சர்மட்ட கூட்டத்தில், இந்திய வெளியுறவுத் துறை (MEA) செயலாளர் ஸ்ரீப்ரியா ரங்கநாதன் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.

    இந்த உயர்மட்டக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் (EU), அதன் உறுப்பு நாடுகள், பாலஸ்தீன், சர்வதேச கூட்டாளிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, பாலஸ்தீன ஆணையத்திற்கு நிதி உதவி மற்றும் அந்நாட்டு மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    அப்போது பேசிய ஸ்ரீப்ரியா ரங்கநாதன், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா நீண்டகால நண்பராக இருந்து வருகிறது என்றும், பாலஸ்தீனத்திற்கு ஐ.நா. முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்க இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

    மேலும், சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இஸ்ரேலும், பாலஸ்தீனமும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இணைந்து வாழும் “இரு நாடுகள் தீர்வு” (Two-State Solution) என்ற கொள்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

    இந்தியாவின் வளர்ச்சிப் பங்களிப்பை எடுத்துக்கூறிய அவர், பாலஸ்தீனத்தில் சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழிற்பயிற்சி உள்ளிட்ட துறைகளில் தேவைக்கேற்ப பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    மேலும், சுகாதாரம், மகளிர் மேம்பாடு, நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் இந்தியா முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இதனைத் தொடர்ந்து மறுவாழ்வு, சுகாதாரம், கல்வி மற்றும் தொழிற்பயிற்சி தொடர்பான புதிய திட்டங்களையும் பாலஸ்தீன மக்களுக்காக தொடங்க உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

    ndia Palestine Palestine statehood UN membership United Nations
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிப்காட் பாய்லர் வெடிப்பு: தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்க.. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!
    Next Article CM சார்..!! உங்க ஆட்டோகிராஃப் வேணும்..!! விருப்பப்பட்ட பெண் டாக்டரிடம் விஜய் கேட்ட கேள்வி..!!
    Editor TN Talks

    Related Posts

    சாமானியருக்கு ஒரு சட்டம்; தவெக நிர்வாகிக்கு ஒரு சட்டமா? – உதயநிதி சாடல்!

    July 14, 2026

    ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: முக அங்கீகாரம் உள்ளிட்ட டிஜிட்டல் புரட்சி விரைவில்!

    July 14, 2026

     சாத்தங்குடி காதலர்கள் உயிரிழந்த விவகாரம்! நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைப்பினரால் தள்ளுமுள்ளு!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: முக அங்கீகாரம் உள்ளிட்ட டிஜிட்டல் புரட்சி விரைவில்!

    சாமானியருக்கு ஒரு சட்டம்; தவெக நிர்வாகிக்கு ஒரு சட்டமா? – உதயநிதி சாடல்!

     சாத்தங்குடி காதலர்கள் உயிரிழந்த விவகாரம்! நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைப்பினரால் தள்ளுமுள்ளு!

    ஐ.நா. உறுப்பு நாடு அங்கீகாரம்: பாலஸ்தீனத்துக்கு இந்தியா மீண்டும் ஆதரவு

    சங்கத்துல உறுப்பினரா இல்லைன்னா நடிக்க முடியாது – சின்னத்திரை நடிகர்கள் சங்கம் அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.