Close Menu
    What's Hot

    நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், எம்பிபிஎஸ் இடங்கள் எத்தனை?!

    2 நாட்களுக்குப் பின் உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 240, வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்வு!

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள்: தமிழகத்தின் விடிவெள்ளியை நினைவுகூர்ந்து கல்வி வணக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»மாவட்டம்»மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் சூடம் ஏற்றி பக்தி பரவசம்!
    மாவட்டம்

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் சூடம் ஏற்றி பக்தி பரவசம்!

    Editor web1By Editor web1July 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 15 08h09m00s318
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி ஆலயத்தில், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில், ஆனி அமாவாசை தினமான நேற்று (ஜூலை 14) அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு நெய், தயிர், சந்தனம், வாசனை திரவியங்கள் மற்றும் பல வண்ண மலர்களால் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன.

    vlcsnap 2026 07 15 08h08m47s587

    இதனைத்தொடர்ந்து, உற்சவர் அங்காளம்மன் ‘ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி’ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அமாவாசை தினம் என்பதால் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான ஊஞ்சல் உற்சவம் இரவு 11 மணியளவில் தொடங்கியது. உற்சவர் அம்மனைத் தங்களது தோள்களில் சுமந்து, வடக்கு வாயில் எதிரே உள்ள ஊஞ்சல் மேடைக்குக் கொண்டு வந்தனர்.

    அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து, தாலாட்டுப் பாடல்களைப் பாடி ஊஞ்சலை அசைத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், தங்களது கைகளில் கற்பூரம் ஏற்றி, “அங்காளம்மா தாயே… அருள்புரிவாயே!” என பக்தி முழக்கமிட்டு பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மேல்மலையனூருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாற்றுத்திறனாளி விசாரணைக் கைதி மரணம்: தலைமை வார்டன் உள்பட 3 காவலர்கள் அதிரடி கைது!
    Next Article பண்ணைக்குள் புகுந்து அட்டகாசம்!. வெறிநாய்கள் கடித்து குதறியதில் 600 கோழிக்குஞ்சுகள் பலி!. அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை!
    Editor web1
    • Website

    Related Posts

    2 நாட்களுக்குப் பின் உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 240, வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்வு!

    July 15, 2026

    ஒப்பந்ததாரரிடம் ரூ. 1.30 லட்சம் லஞ்சம் பெற்ற தவெக ஊராட்சி மன்ற தலைவர்?- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

    July 15, 2026

    மாற்றுத்திறனாளி விசாரணைக் கைதி மரணம்: தலைமை வார்டன் உள்பட 3 காவலர்கள் அதிரடி கைது!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், எம்பிபிஎஸ் இடங்கள் எத்தனை?!

    2 நாட்களுக்குப் பின் உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 240, வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்வு!

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள்: தமிழகத்தின் விடிவெள்ளியை நினைவுகூர்ந்து கல்வி வணக்கம்!

    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்ட இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீரர் அனில் மேனன்! ரஷிய விண்கலம் மூலம் வரலாற்றுப் பயணம்!

    ஈரானுக்கு பேரதிர்ச்சி!. துறைமுகங்களை சுற்றி வளைத்த அமெரிக்கா!. மின் நிலையங்களை அழிப்பேன் என டிரம்ப் மிரட்டல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.