Close Menu
    What's Hot

    பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை! கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் உயிரிழப்பு!. 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம்!

    தமிழகத்தில் தலைவிரித்தாடும் ஊழல், கஞ்சா, மணல் கடத்தல்..!! Ex. அமைச்சர் ரகுபதி காட்டம்..!!

    தவெக அரசு கவிழாது.. 5 ஆண்டுகள் தொடரும்..!! விஜய் கூட்டணி குறித்து திருமா பரபரப்பு தகவல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஹார்முஸ் பகுதிக்கு இந்திய மாலுமிகளை அனுப்ப வேண்டாம்!. மத்திய அரசு அதிரடி உத்தரவு!
    Featured

    ஹார்முஸ் பகுதிக்கு இந்திய மாலுமிகளை அனுப்ப வேண்டாம்!. மத்திய அரசு அதிரடி உத்தரவு!

    Editor web3By Editor web3July 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Strait of Hormuz
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்தத் தடை விதித்து இந்திய கடல்சார் நிர்வாக இயக்குநரகம் (DGMA) உத்தரவிட்டுள்ளது.

    கடந்த மூன்று நாட்களில் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் இந்திய அரசு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய மத்திய கிழக்கு மோதலில், இதுவரை 13 இந்தியர்கள் வளைகுடா பிராந்தியத்தில் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், மறு உத்தரவு வரும் வரை, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பலிலும் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்தக் கூடாது என கப்பல் உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் ஆள்சேர்ப்பு நிறுவனங்களுக்குக் உத்தரவிடப்பட்டுள்ளது.

    வணிகக் கப்பல்கள் மீதான அபாயம் அதிகரித்துள்ளதால், மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடல்சார் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கப்பல்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், கடல்சார் பாதுகாப்பு எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் கப்பல் கேப்டன்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எந்தவொரு அவசர கால உதவிக்கும் இந்திய மாலுமிகள் உடனடியாக ‘இந்திய கடல்சார் தகவல் தொடர்பு மையம்’ அல்லது ‘இந்திய கடற்படையின் தகவல் ஒருங்கிணைப்பு மையத்தை’ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    ஈரானின் கடலோரப் பாதுகாப்பு மற்றும் ஏவுகணைத் தளங்களை இலக்கு வைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள், வளைகுடா பிராந்தியத்தில் போரைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதற்குப் பதிலடியாக, ஈரானும் தனது துறைமுகங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், அமெரிக்காவுடனான தங்களின் போர் தவிர்க்க முடியாதது என எச்சரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் எரிசக்தி ஏற்றுமதி மற்றும் சரக்குக் கப்பல் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

    Central Government Do not send Indian sailors Hormuz region Indian sailors
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமயிலாடுதுறை ; பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்…. பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் போதை இளைஞர்கள் வெறிச்செயல்
    Next Article விழுந்தா வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு – ரூ.30 கோடி கேரள ஓணம்  பம்பர் லாட்டரி வெளியீடு
    Editor web3
    • Website

    Related Posts

    பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை! கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் உயிரிழப்பு!. 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம்!

    July 16, 2026

    தமிழகத்தில் தலைவிரித்தாடும் ஊழல், கஞ்சா, மணல் கடத்தல்..!! Ex. அமைச்சர் ரகுபதி காட்டம்..!!

    July 16, 2026

    தவெக அரசு கவிழாது.. 5 ஆண்டுகள் தொடரும்..!! விஜய் கூட்டணி குறித்து திருமா பரபரப்பு தகவல்..!!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை! கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் உயிரிழப்பு!. 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம்!

    தமிழகத்தில் தலைவிரித்தாடும் ஊழல், கஞ்சா, மணல் கடத்தல்..!! Ex. அமைச்சர் ரகுபதி காட்டம்..!!

    தவெக அரசு கவிழாது.. 5 ஆண்டுகள் தொடரும்..!! விஜய் கூட்டணி குறித்து திருமா பரபரப்பு தகவல்..!!

    முதல்வர் விஜயின் கிரீன் சிக்னல்? மகளிருக்கு ரூ.2500 திட்டம் பட்ஜெட்டில் வெளியாகுமா?

    கழுத்து, கை நிறைய 3 கிலோ தங்கம்!. குத்தாட்டம் போட்ட திமுக ஊராட்சிமன்ற தலைவர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.