Close Menu
    What's Hot

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!
    உலகம்

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    Editor web1By Editor web1July 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    H 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில் உள்ள குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனைக்கு அருகே அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அஹ்வாஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஷாஹித் பாகேய்’ குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனைக்கு அருகே உள்ள இலக்குகள் மீது அமெரிக்காவின் மத்திய கட்டளையகம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலின் போது ஏற்பட்ட பயங்கர வெடிச்சத்தம் மற்றும் அதிர்வுகள் காரணமாக மருத்துவமனைக் கட்டிடம் கடுமையாகக் குலுங்கியது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் மற்றும் அவர்களது பெற்றோர் பெரும் பீதிக்குள்ளாகினர்.

    தாக்குதலைத் தொடர்ந்து, மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்த 211 சிறுவர்கள் உள்ளிட்ட புற்றுநோய் நோயாளிகள் அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். தற்போது இந்த மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கிருந்த குழந்தைகள் அனைவரும் மாற்று மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

    அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. “உயிரைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் ஒரு காட்டுமிராண்டித்தனமான மற்றும் கோழைத்தனமான போர்க்குற்றமாகும் என ஈரான் தெரிவித்துள்ளது. காசாவில் உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்தும் கொடூரத் தாக்குதல்களைப் போன்றே இதுவும் அமைந்துள்ளது என கூறியுள்ளது.

    வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் ராணுவக் உள்கட்டமைப்புகளை அழிப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குழந்தைகள் மருத்துவமனைக்கு அருகே குண்டுகள் விழுந்தது குறித்து அமெரிக்க ராணுவம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!
    Next Article இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!
    Editor web1
    • Website

    Related Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    July 16, 2026

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    July 16, 2026

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.